""திவ்யதர்ஷினி!''

இந்தியா முழுவதும் இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இருக்காது! குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்வாகியிருக்கும் திவ்யதர்ஷினிக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தாலும், அந்
""திவ்யதர்ஷினி!''
Updated on
2 min read

இந்தியா முழுவதும் இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இருக்காது! குடிமைப் பணிகளுக்கான

தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்வாகியிருக்கும் திவ்யதர்ஷினிக்குப் பாராட்டுகள்

குவிந்துகொண்டிருந்தாலும், அந்தப் பாராட்டுகளால் தளும்பாத நிறைகுடமாய் புன்னகையையே

பதிலாகத் தருகிறார்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு அவரின் இரண்டாவது முயற்சியில் கிடைத்திருக்கும் வெற்றி இது. "தோல்வியே வெற்றிக்கு முதல் படி' என்னும் பொன்மொழிக்கு

உதாரணமாய், "சாத்தியம் என்பது சொல் அல்ல; செயல்' என நிரூபித்திருக்கிறார். விடாமுயற்சியால் விஸ்வரூப

வெற்றியை அடைந்திருக்கும்  வழக்கறிஞர் திவ்யதர்ஷினியை, சென்னை, ஜெயலஷ்மிபுரத்தில்

இருக்கும் அவரது இல்லத்தில்சந்தித்தோம்.



நான்கு தூண்களுக்குள் மரியாதை வேண்டும்!

இலக்கை அடைந்துவிட்டீர்கள். இதற்குப் பிறகு..?

இதன் பிறகு மேற்கொண்டு பயிற்சிக்காக முúஸôரிக்குச் செல்லவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சி இருக்கும்.



இந்த வெற்றிக்காக நீங்கள் விட்டுக்கொடுத்த விஷயங்கள் எவை?

வெற்றிக்காக நான் எதையும் விட்டுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. இதற்காகக் கொஞ்சம் கடின உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன் என்பது மட்டும் உண்மை. தேர்வு நேரங்களில் சில மணிநேரங்கள் அதிகமாகப் படித்திருக்கிறேன். அதுவும் கூர்ந்த ஈடுபாட்டுடன் படித்ததே இந்த வெற்றியின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன். எடுத்த காரியத்தை ரசித்துச் செய்தாலே பாதி காரியம் முடிந்ததற்கு ஈடாகும். படிப்பும் அதைப்போலத்தான்!

நாட்டில் அவசியம் களையப்படவேண்டிய ஒன்று எது?

நம் நாட்டில் மக்கள் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒன்று லஞ்சம். நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய இடையூறாக இருப்பதும் இதுதான். அதனால் லஞ்சம் களையப்படவேண்டும். கிராமப்புரத்துக்கும் நகர்ப்புறத்துக்கும் இடையே இருக்கும் வளர்ச்சி சார்ந்த இடைவெளியைக் குறைக்கவேண்டும். இந்த விஷயத்துக்கும் உரிய கவனம் அளிக்கவேண்டும்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் செய்யக்கூடாத மூன்று விஷயங்கள், நிச்சயம் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள் என்னென்ன?

செய்யக்கூடாத விஷயங்கள் - மனம் தளரக் கூடாது, எப்போதும் தன்னம்பிக்கை இழக்கக்ககூடாது, மற்றும் சில இடர்ப்பாடுகள் வரும்போது அதை எதிர்த்து நாம் நமது குறிக்கோளை நோக்கியே செல்லவேண்டும். துவண்டுவிடக்கூடாது.

அவசியம் செய்யவேண்டிய விஷயங்கள் - ஈடுபாட்டுடன் படிக்கவேண்டும். படிப்பதை ஒரு சுமையாக எண்ணாமல் ரசித்துப் படிக்க வேண்டும். தேர்வுக்கான சரியான ஓர் உத்தியைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

முதல் முறை தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை உணர்ந்தீர்களா? அதை எப்படிச் சரி செய்தீர்கள்?

எப்படிப் படிக்கவேண்டும். எதைப் படிக்க வேண்டும். எப்படித் தேர்வு தாளில் எந்தெந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்பதை, முதல் முறை தோல்வி அடைந்ததிலிருந்து நன்றாக உணர்ந்து கொண்டேன். இந்தத் தவறுகளை அடுத்த முயற்சியில் சரிசெய்தும் கொண்டேன்.

உங்களுடைய குடும்பத்தினர் உங்களின் இந்த வெற்றிக்காக செய்திருக்கும் தியாகங்கள் எவை?

"அவர்கள் என்னை படிப்பு முடிந்ததும் வேலைக்குப் போ...' என்று சொல்லாமல் படிக்க அனுமதித்ததே அவர்கள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. அம்மா, அப்பா, அக்கா, தம்பி என்று அனைவருமே நான் தேர்ந்தெடுத்த இந்த ஐ.ஏ.எஸ். பாதைக்கு வழித் துணையாக நின்றார்கள்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் எந்தத் தூண் இன்னும் வலிமையானதாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நான்கு தூண்களுமே அதனதன் முக்கியத்துவத்தை முழுமையாக அறியவேண்டும். இதுமட்டுமின்றி மக்களின் பங்களிப்பு இதில் தலையாயதாக நான் கருதுகிறேன். நான்கு தூண்களும் மற்றொன்றின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். நான்கு தூண்களுக்குள் பரஸ்பர மரியாதை வேண்டும். இது நடந்தால் ஜனநாயகம் வலுவடையும்!

மக்கள் தொடர்புச் சாதனங்களில் பத்திரிகைகளின் பங்கு திருப்திகரமாக இருக்கின்றதா?

பத்திரிகைத் துறை ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான வெளிப்பாடு. அவற்றின் பங்கு இன்றைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று!

கடைகோடி குழந்தைக்கும் கல்வி கிடைப்பதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவது முக்கியமான ஒன்று. அரசு பல முயற்சிகள் எடுத்துவந்தாலும் அது பொது மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவிகள் சிறப்பாகச் செயல்படுவது இன்றியமையாததாகிறது. கல்வி, ஒரு மனிதனின் வாழ்நாள் பாதைக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்வதால் அதன் முழுமையான பயன்பாட்டை மக்களுக்குக் கொண்டு செல்லவேண்டும்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் எந்த

அளவுக்கு ஈடுபடலாம்?

இது கடும் போட்டிக்குரிய தேர்வு. கூர்ந்த ஈடுபாடு இந்தத் தேர்வுக்கு அவசியம். பொழுதுபோக்குகளை தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பு கண்டிப்பாக நல்ல முடிவுகளைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com