நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எங்களின் சாதனை!

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள வனப் பாதையில், குறிப்பிட்ட இடைவெளி விட்டு, 20க்கும் மேற்பட்ட ஜீப்புகள் வேகமாகப் பாய்கின்றன. நாம் பயணப்பட்ட ஜீப்பும் அதில் ஒன்று. கோடைக் காலத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:38 am

எம். ஆனந்த்

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள வனப் பாதையில், குறிப்பிட்ட இடைவெளி விட்டு, 20க்கும் மேற்பட்ட ஜீப்புகள் வேகமாகப் பாய்கின்றன. நாம் பயணப்பட்ட ஜீப்பும் அதில் ஒன்று. கோடைக் காலத்தில் வற்றிப் போகும் காட்டு ஓடைகளின் மணல் கலந்த தடம் அது. முன்னால் செல்லும் ஜீப் ஓட்டுநர் கையில் ஒரு வாக்கி டாக்கி. அதேபோல் கடைசியில் வரும் ஜீப் ஓட்டுநர் கையில் ஒரு வாக்கி டாக்கி. ஏதாவது ஒரு ஜீப் பிரச்னையில் மாட்டிக் கொண்டாலும் மற்ற ஜீப்புகள் உதவிக்கு வர இந்த ஏற்பாடாம்!

இரண்டு பக்கங்களிலும் பெரிய பாறைகள் மற்றும் களி மண்ணால் ஆன தடுப்புகள் ஓங்கி உயர்ந்து நின்றன. சற்று தூரம் சென்றவுடன் அங்கு சிறு புல் மற்றும் செடிகளுடன் பரந்து விரிந்து கிடந்தது அந்தத் திடல். அங்கிருந்து ஆரம்பித்தது போட்டி. ஒவ்வொரு ஜீப்பும் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறின.

நமக்கு முன்னால் போன இரண்டு ஜீப்புகளும் அந்தப் பள்ளத்தில் சேற்றை நான்கு திசைகளுக்கும் வாரி இறைத்தபடி சுழன்று கொண்டிருந்தன. சேற்றுக்குள் சிக்கிய ஜீப்பை லாகவமாகத் தனது திறமையால் வெளியே எடுத்தார் ஓட்டுநர் சந்தோஷ். அதற்குள் சேற்றில் மாட்டிக் கொண்ட இன்னொரு ஜீப்பை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டிருந்தார் மற்றொரு ஓட்டுநர் சசி.

குறிப்பிட்ட நேரத்திற்குள் ஜீப்பை மீட்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. அப்படியும் முடியாவிட்டால், சசியின் அணியைச் சேர்ந்தோர் களத்தில் இறங்கி மீட்பார்கள். ஆனால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சந்தோஷ் தனது ஜீப்பை அந்த சேற்றில் வேகமாக ஓட்டி "ஸ்கிராவலிங்' செய்து சேற்றை சசி அணியினர் மீது வாரி இறைப்பார்.

வெள்ளை டி-சர்ட் முழுவதும் சேற்றின் வண்ணம் படியும் வரை இந்தப் போட்டி தொடர்கிறது. அடுத்து மேலும் இரண்டு ஜீப்புகள் குழிக்குள் சீறிப் பாய்கின்றன. இப்படி ஒரு புதுமையான விளையாட்டை வார விடுமுறைகளில் விளையாடுகின்றனர். கோவை "ஸ்ட்ரீப் அண்டு டீப்' ஜீப் கிளப் நண்பர்கள். தற்போது 20க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றன. இந்த விளையாட்டைத் துவக்கிய என்.ஆனந்த் மற்றும் சசிகுமாரிடம் இந்த விளையாட்டு குறித்துக் கேட்டோம்:

இந்த விளையாட்டை நடத்த நோக்கம் என்ன? எப்போது ஆரம்பித்தீர்கள்?

ஆரம்பகாலம் முதலே ஜீப் மேல் எங்களுக்கு ஒரு மோகம் உண்டு.  ஜீப்களை விற்கத் தயாராக இருந்தவர்களிடமிருந்து வாங்கி அதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவு செய்து மறுவடிவமைத்து ஓட்டினோம். கார்கள் ஏறமுடியாத மலைக் குன்றுகள், காடு மேடுகள், பள்ளங்களை ஜீப்புகள் சர்வசாதாரணமாகக் கடந்துவிடும். இப்படியான பயணங்கள் மிகவும் சுவாரசியமானவை. திகில் நிறைந்தவையாகவும் இருந்தன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நானும் சசியும் சேர்ந்து ஆரம்பித்தோம். எங்களைப் போல் கார் வைத்திருந்தாலும் ஜீப்புகளை விற்காமல் வைத்திருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்தோம். தற்போது எங்களைப் போல் 20 பேர் சேர்ந்து "டீப் அண்டு ஸ்ட்ரீப் எனும்' கிளப்பை நடத்தி வருகிறோம். புதுமையான மற்றும் திகில் நிறைந்த அனுபவத்திற்காக இந்த விளையாட்டை நடத்திவருகிறோம்.

எந்த மாதிரியான இடங்களில் இந்த விளையாட்டை நடத்துகிறீர்கள்?

மலையடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெரிய தரிசு நிலங்கள், வறண்டு போன ஓடைகள், மலைப்பாதைகள், சேறும் சகதியுமாய் கொஞ்சம் தண்ணீர் உள்ள குட்டைகள், ஆஃப் ரோடு டிரைவிங் எனப்படும் சாலை வசதி இல்லாத கரடுமுரடான பாதைகளில் இந்த விளையாட்டை நடத்துவோம்.

இந்த விளையாட்டைப் பற்றிச் சொல்லுங்களேன்?

ஒவ்வொரு வாரமும் புதிய பாதைகள் மற்றும் இடங்களைத் தேர்வு செய்து அங்கு விளையாட்டை நடத்துவோம். சேறும் சகதியுமான இடத்தில் முதலில் இரண்டு ஜீப்புகளை இறக்கிவிடுவோம். இரண்டு அணிகளாகப் பிரிந்து ஒரு அணி ஓர் ஓட்டுநரையும் மற்றொரு அணி மற்றொரு ஓட்டுநரையும் ஆதரிக்கும்.

சினிமாவில் காண்பிப்பதைப் போல இரண்டு ஜீப்புகளை மேட்டிலிருந்து சேறும் சகதியுமாய் உள்ள பள்ளத்திற்குள் (சிறிய குளம் போன்ற இடம்) வேகமாக ஓட்டிச் செல்ல வேண்டும். இருவரில் யார் மிகவும் வேகமாகவும், திறமையுடனும் வாகனத்தை இயக்குகிறார்கள் என்பதற்கு மதிப்பெண் புள்ளிகள் கொடுப்போம். மேலும் சேற்றில் வாகனம் மாட்டிக் கொண்டால், குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்கவேண்டும்.

சேற்றில் மாட்டிக் கொண்ட ஜீப்பை வெளியே எடுக்க முயற்சி செய்யும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இன்னொரு ஓட்டுநர் தனது ஜீப்பை வேகமாக இயக்கி சேற்றில் மாட்டிக் கொண்ட ஜீப் மேல் இடிப்பார். இதில் யாருடைய வெள்ளை டி-சர்ட் முழுமையாக கறை அடைகிறதோ அவரது அணி தோற்றதாக அறிவிக்கப்படும்.

இதேபோல் சரிவான பாதைகளில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை சென்று கீழ்நோக்கி வரவேண்டும். எந்த ஜீப் குறைந்த நேரத்தில் வருகிறதோ அவர் வெற்றி பெற்றவர். இதை போல் சிறிய நீர் ஓடைகளில் ஓட்டி குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திரும்பவேண்டும். யார் குறைந்த நேரத்தில் சென்று வருகிறார்களோ அவரே வெற்றி பெற்றவர். இப்படி இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன.

இதனால் என்ன பயன்?

இப்படியான பயணங்கள் எங்களுக்கு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளன. எந்த மாதிரியான சாலையில் எப்படி ஓட்டவேண்டும், சரிவான பாதைகளில் பிரேக்கை மட்டும் நம்பாமல், கியரை வைத்து சமாளிப்பது. ஸ்டேரிங்கை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் நாங்கள் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

நாங்கள் புரிந்துகொண்ட விஷயங்களை,  மலைப்பாதைகளில் வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு செயல் விளக்கம் தருகிறோம். பேரிடர்களைச் சமாளிக்கவும் திறமையாக வாகனங்களை ஓட்டவும் அனுபவரீதியாக சோதனை செய்து மற்றவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுக்கிறோம். இதனால் மலைப் பாதைகளில் விபத்துகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

எந்தெந்த வகையான ஜீப்களை உங்கள் உறுப்பினர்கள் வைத்துள்ளனர்?

வின்டேஜ்- ஜி.பி.டபிள்யு ஃபோர்டு, வில்லீஸ்-எம்பி, ஜேன்கோ சிஜே-5, வில்லீஸ் சிஜே3பி, எம்எம்540, 550மட், இன்வேடர், போலீரோ போன்ற பலவிதமான மாடல் ஜீப்களை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.