நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேமிராவில் விரல் பதித்தேன்; லண்டனில் கால் பதித்தேன்!

அண்மையில் இணையதளத்தில், வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கான உலக அளவிலான போட்டியைப் பிபிசி வனஉயிரின இதழ், நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம் (லண்டன்) மற்றும் வியோலியா சுற்றுச்சூழல் வனஉயிரின புகைப்படக் கழகம் ஆகிய

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

எம். ஆனந்த்

அண்மையில் இணையதளத்தில், வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கான உலக அளவிலான போட்டியைப் பிபிசி வனஉயிரின இதழ், நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம் (லண்டன்) மற்றும் வியோலியா சுற்றுச்சூழல் வனஉயிரின புகைப்படக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து புகைப்படப் போட்டியை நடத்தின. லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் நடந்த இந்தப் போட்டியில் 95 நாடுகளில் இருந்து 41ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 11 முதல் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அதிகம் பேசப்பட்ட புகைப்படம் என்பதற்கான பெருமையுடன் விருதைத் தட்டிச் சென்ற மாணவன் தமிழகத்தைச் சேர்ந்தவர். கோவை, விவேகாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனின் பெயர் கௌரவ் ராம்நாராயணன்.

மூன்று தலைமுறையாக தாத்தா தாமோதரன், அப்பா ராம்நாராயணன், கௌரவ் ராம்நாராயணன் என இவர்கள் மூவருமே வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பதில் தொடர் ஆர்வம் உள்ளவர்கள். இது குறித்து ராம் நாராயணன் கூறுகையில், ""எனது மகனுக்கு நான் ஒரு கேனான் "56ஓ1' மாடல் கேமிராவை வாங்கித் தந்தேன். அப்போதெல்லாம் யானையைப் பார்த்தாலே ஓடிவிடுவான். இன்றோ புலி, யானை, சிறுத்தை, பலஆயிரக்கணக்கான பறவைகள், இயற்கை காட்சிகள் என எடுத்துத் தள்ளுகிறான்.'' என்றார் பெருமை பொங்க!

""என் மகன் இந்த வயசுலேயே சர்வதேச விருதை வாங்கி விட்டான் அதுதான் பெருமை'' என்றார் கெüரவ்வின் தாய் சாஷி.

""தாத்தாவில் ஆரம்பித்து பேரன் வரை மூவருக்கும் காடுதான் வீடு'' என்றார் பாட்டி பிரேமா.

கோவையில் உள்ள வனப் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் கௌரவுக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு. அது "புலிப் பாண்டி' என்பதே. காரணம், செüரவ் எடுத்த புலிப் படங்கள்தான். இந்தப் படங்கள் பார்ப்பவர்களை மிரட்டாமல் விட்டதில்லை. பல ஆண்டுகளாக காட்டிலேயே திரியும் பல வனஉயிரின புகைப்படக் கலைஞர்களுக்குக் கூட புலி தென்பட்டதே இல்லை.

""அதற்கு கொஞ்சமல்ல நிறையவே "லக்' வேண்டும். அவ்வளவு ஏன், கெüரவ்வின் தாத்தாவே புலியைப் பார்த்ததில்லையாம். புலியை நேருக்கு நேர் பார்த்தாலே நடுங்க ஆரம்பித்துவிடும். நடுங்காமல் கேமிராவைப் பிடித்து சரியான "அப்ரேட்சர்' மற்றும் "ஷட்டர்ஸ்பீடு' தேர்வு செய்து படம் எடுப்பது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நெகிழ்ச்சியுடன் கூடிய திகில் அனுபவம்'' என்கின்றனர் கோவை வனவிலங்குப் புகைப்படம் எடுப்போர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

வனவிலங்கு புகைப்படப் போட்டியில் கலந்துகொண்டது குறித்து கெüரவ் நம்மிடம் பேசியதிலிருந்து...

""நான் ஐந்து படங்களை அனுப்பினேன். அசாம் மாநிலம் காசிரங்காவில் எடுத்த ஒரே படத்தில் யானை, காட்டெருமை, புலி ஆகிய மூன்றும் அடங்கியிருக்கும். இந்தப் புகைப்படம்தான் போட்டியில் என்னைத் தேர்வு செய்ய காரணமாக அமைந்தது. பல சுற்றுக்கள் நடந்தன. அதில் இரண்டாம் சுற்றில் முதுமலையில் எடுத்த புகைப்படம் இது. மானைக் கொன்று மரத்தின் மேல் எடுத்துச் சென்று அமர்ந்திருக்கும் சிறுத்தை. அரையிறுதிச் சுற்றில் தேர்வு செய்யப்பட்டது, மத்திய பிரதேசம் பாந்தவார் தேசியப் பூங்காவில் குரங்கை வாயில் கவ்விச் செல்லும் புலிப்படம்.

கோவை காளப்பட்டியில் பருந்து வகையைச் சேர்ந்த ஒரு படம் என்னை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறவைத்தது. ராஜஸ்தான் பரத்பூரில் எடுத்த நரிகளின் எல்லைச் சண்டை படம், என்னை 24 நாடுகளில் இருந்து வந்திருந்த 79 படங்களுடன் போட்டியிட்டு விருது பெற வைத்தது.

""அடிக்கடி காடுகளுக்குச் செல்வதால் உங்களின் படிப்பு பாதிக்காதா?'' என்றோம்.

""நான் டியூஷன் கூட இல்லாமல் சிறப்பாகப் படிக்கிறேன். அதற்குக் காரணம், என் நண்பன் அத்வைத். நான் விடுமுறையில் செல்லும் நாள்களில் வகுப்பில் எடுத்த பாடங்கள் மற்றும் தேவையான விஷயங்களை எனக்காக ஜெராக்ஸ் எடுத்து வைத்திருப்பான். எனக்காக வீட்டுக்கு வந்த எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லியும் தருவான். எனது வகுப்பாசிரியர்களும் பள்ளி நேரம் முடிந்த பின்னரும் எனக்காகக் கூடுதல் நேரம் ஒதுக்கி சொல்லித்தருவார்கள். இந்த வெற்றியின் பின்னணியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.