ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கால்குலேட்டரே தேவையில்லை!

ஐந்தும் ஒன்றும் எவ்வளவு? என்று கேட்டால், ""இருங்கள்... சொல்கிறேன்'' என்று கால்குலேட்டரைத் தேடும் காலம் இது. ஜப்பானில் நடைபெறும் உலக அளவிலான அபாகஸ் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், 5 நிமிடத்தில் 100

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:31 pm

ந. ஜீவா

ஐந்தும் ஒன்றும் எவ்வளவு? என்று கேட்டால், ""இருங்கள்... சொல்கிறேன்'' என்று கால்குலேட்டரைத் தேடும் காலம் இது.

ஜப்பானில் நடைபெறும் உலக அளவிலான அபாகஸ் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள்,

5 நிமிடத்தில் 100 கணக்குகளை மனக்கணக்காகவே போட்டுவிடுகிறார்கள். இது எப்படி சாத்தியம்? என்று கேட்கிறீர்களா?

""அந்த மாணவர்கள் மிகச் சிறுவயதில் இருந்தே அபாகஸ் பயிற்சி பெற்றவர்கள். அதனால்தான் கணக்குப் போடுவது அவ்வளவு எளிதாகிவிடுகிறது'' என்கிறார் சாரதா ஸ்ரீராம். சென்னை இராயப்பேட்டையில் உள்ள "ஐடியல் பிளே அபாகஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரான அவர், இதுவரை 1400 அபாகஸ் பயிற்சியாளர்களை உருவாக்கியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, சாரதா ஸ்ரீராம் பரத நாட்டியக் கலைஞர். கர்நாடக சங்கீதமும் தெரியும். பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே இரண்டாவது மாணவியாக வந்தவர். பி.காம் படிக்கும்போது கோல்டு மெடலிஸ்ட். சி.ஏ.வில் அகில இந்திய அளவில் 10 வது இடத்தைப் பிடித்தவர். இவ்வளவு திறமைகள் இருந்தும் அவற்றில் எல்லாம் ஈடுபடாமல், அபாகஸில் ஆர்வம் வந்தது எப்படி? என்று அவரிடம் கேட்டோம்:

""வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் முக்கியம். இப்போதுள்ள சூழ்நிலையில் மூளையை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு குழந்தைகளுக்கு இல்லை. எனவே அபாகஸ் பற்றித் தெரிந்து கொள்வதற்காக நானும், சித்ரா ரவீந்திரனும் மலேசியாவுக்குச் சென்று அபாகஸ் பயிற்சி பெற்றோம். அங்கு இருந்தே தேவையான புத்தகங்கள், அபாகஸ் பயிற்சிப் பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு, சென்னைக்கு வந்தோம்.

2003 இல் அபாகஸ் பயிற்சி மையத்தை சென்னையில் ஆரம்பித்தோம். அப்போது எங்களுடைய பயிற்சி மையத்தில் விவிஎஸ் நல்லெண்ணெய் அதிபர் யோகனின் பேரன் பயிற்சி பெற வந்தான். அவனுடைய கணிதத் திறமையைப் பார்த்த அவர், விருது

நகரில் ஓர் அபாகஸ் பயிற்சி மையத்தை ஏற்படுத்த விரும்பினார். இப்படி எங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் மூலமாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அபாகஸ் பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எங்களிடம் அபாகஸ் பயிற்சி பெற்றவர்களும் அவரவர் இடத்தில் பயிற்சி மையங்களைத் திறந்தனர். இவை தவிர, ஜம்மு காஷ்மீர், மிúஸôராம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஒரிஸô ஆகிய இடங்களில் 600க்கும் அதிகமான அபாகஸ் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

நாங்கள் அபாகஸ் சொல்லித் தருவதற்கான பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து, அவர்களே அபாகஸ் பயிற்சி மையம் ஆரம்பிப்பதற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவிடுகிறோம். இதுவரை எங்களுடைய அபாகஸ் பயிற்சி மையங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அபாகஸ் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் அல்லாமல், அமெரிக்கா, செüதி அரேபியா, நைஜீரியா ஆகிய நாடுகளிலும் எங்களுடைய உதவியால் அபாகஸ் பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன'' என்கிறார் பெருமையுடன்.

அபாகஸ் பயிற்சி பெறுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மேம்படுகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

""கால்குலேட்டரை விட மூளையின் வேகம் அதிகம். குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக முக்கியம். மனித மூளையின் இடதுபுறம் அறிவுப்பூர்வமான செயல்களுக்கு உகந்தது. அதை லாஜிக் சைடு என்பார்கள். வலதுபுறமோ கற்பனைக்கும், சிந்தனைக்கும் உரியது.

அதை கிரியேட்டிவ் சைடு என்பார்கள். அபாகஸ் பயிற்சியில் ஆரம்பத்தில் மணிச் சட்டம் மூலமாக எளிய கணக்குகளைப் போடக் கற்றுத் தருவோம். இது மூளையின் லாஜிக் சைடு வளர்ச்சிக்கு உதவும். அதைப் பயன்படுத்திக் கணக்குப் போட்டவர்கள், சிறிது நாட்களில் மணிச் சட்டம் இல்லாமலேயே அபாகஸ் அடிப்படையில் கணக்குப் போடும் திறமை பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள்.

அதாவது மூளையின் வலதுபுறமான கிரியேட்டிவ் சைடுக்கு வேலை கொடுக்கப்பட்டுவிடும். அபாகஸ் கருவி மூளையில் காட்சி வடிவத்தில் பதிந்துவிடும். 4 ஆயிரத்து 348 உடன் 9 ஆயிரத்து 412 ஐக் கூட்டினால் எவ்வளவு? என்று பெரிய எண்களைக் கூட்டச் சொன்னாலும், நாம் ஐந்தும் ஐந்தும் பத்து என்று கூட்டிச் சொல்லும் நேரத்துக்கு முன்பாகவே "டக்'கென்று சொல்லிவிடுவார்கள்.

நாங்கள் குழந்தைகளின் உற்றுக் கவனிக்கும் பண்பையும் வளர்க்கவும் பயிற்சி அளிக்கிறோம். உதாரணமாக, அபாகஸ் பயிற்சியளிப்பவர், 10 கணக்குகளை ஒரே ஒருமுறை மட்டும் வாசிப்பார். பயிற்சி பெறும் குழந்தைகள் அவற்றைப் போட வேண்டும். சில குழந்தைகள் பத்து கணக்குகளையும் போட்டுவிடுவார்கள். சிலரோ ஒரு கணக்கு மட்டுமே போடுவார்கள்.

எல்லாரும் பத்துக் கணக்குகளையும் போடும் வரை பயிற்சி அளிப்போம். பத்துக் கணக்குகளையும் பயிற்சி தருபவர் வாசிக்கும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அபாகஸ் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் பள்ளியில் வகுப்பு நேரத்தில் இதே போல பிற பாடங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறமையைப் பெற்றுவிடுவார்கள். மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் பயில்வார்கள்'' என்று உறுதியாகச் சொல்கிறார் சாரதா ஸ்ரீராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.