வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் புதன்கிழமை முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:35 am IST

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் புதன்கிழமை முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையமான இங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அங்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், கோவில்மேடு, வடகோவை, ஆா்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், வடவள்ளி மற்றும் பி.என்.புதூா் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை புதன்கிழமை (ஏப் 29) மாலை 5 மணி முதல் மே 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு விதிகளை மீறி ட்ரோன்களை இயக்குபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.