அழிந்து வரும் அரிய உயிரினம்!
பூமியின் பருவநிலை மாற்றம் மனித இனத்திற்கு மட்டுமின்றி, கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பூமி வெப்பமடைதல் மூலம் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து லட்சத்


பூமியின் பருவநிலை மாற்றம் மனித இனத்திற்கு மட்டுமின்றி, கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பூமி வெப்பமடைதல் மூலம் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து லட்சத்
தீவில் ஆய்வு நடத்திய அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம், மீன் இனத்தைச் சேர்ந்த பேருரு மட்டிகள் (எண்ஹய்ற் இப்ஹம்) மிகவும் பாதிப்படைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் முனைவர் டி.டி.அஜீத்குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...
""கடல்நீரின் வெப்பநிலை அதிகரிப்பால் கடலில் உள்ள பேருரு மட்டிகள் இயற்கையான நிறம் மாறி முற்றிலும் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறது. பேருரு மட்டிகள் கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளில் பரவலாகக் காணப்படுகிறது. இவை, மெல்லுடலிகள் (பழ்ண்க்ஹஸ்ரீய்ஹ) தொகுதியில், பைவால் (ஆண்ஸ்ஹப்ஸ்ங்) எனும் குடும்பத்தை சார்ந்தது.
இந்தியக் கடற்பகுதியில் நான்கு வகையான பேருரு மட்டிகள் காணப்பட்டாலும் டி.மாக்ஸிமா என்கிற சிறிய பேருரு மட்டி மிகவும் சிறப்பம்சம் கொண்டதாகும். இதனை உணவாகவும், வண்ண மீன்களாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை முதன் முதலில் இந்தோனிஷியாவைச் சேர்ந்த ரோடிஸ் எனும் விஞ்ஞானி 1798-ம்
ஆண்டு விவரித்தார். டிரைடாக்னா மாக்ஸிமா தூய, அதிக உப்பு மற்றும் குறைவான ஆழம் கொண்ட பகுதியில் வளரும் தன்மை கொண்டவை. ஒரு சில வகையான பேருரு மட்டிகள் 40 மீட்டர் ஆழத்திலும் வளரும் தன்மை கொண்டவை என அறியப்பட்டுள்ளது. இவைகள் கடல்நீரில் உள்ள நுண்ணுயிர் மிதவை தாவரங்களை வடிகட்டி உணவாக எடுத்துக் கொள்கின்றன. மேலும் நீரில் கரைந்துள்ள தாதுப் பொருள்கள் மற்றும் அவற்றின் மிருதுவான சதைப்பகுதியில் இணைந்து வாழும் சூசேன்தல்லா (ழஞஞலஅசபஏஉககஅ) மூலம் ஒளிச்சேர்க்கை செய்து தனக்கு தேவையான ஆற்றலை, உணவை பெற்றுக் கொள்கின்றது.
25 டிகிரி முதல் 30 டிகிரி வரை வெப்பம், 32 முதல் 35 ல்ல்ற் உப்புத்தன்மை, மற்றும் 8.1 முதல் 8.5 வரையிலான அமில, காரத்தன்மை இவை வளர சாதகமான சூழ்நிலைகள் ஆகும். 15 செ.மீ முதல் 137 செ.மீ நீளமும், 250 கிலோ வரையிலான எடையையும் கொண்ட பேருரு மட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் பெரும்பாலும் ஆண் மற்றும் பெண் உறுப்புகளை தன்னகத்தே பெற்றுள்ளன. முதலில் ஆண் இனப்பெருக்க உறுப்பு உருவாகின்றது. தொடர்ந்து பெண் இனப்பெருக்க உறுப்பு உருவாகின்றது. டி.மார்க்ஸியா சிறிய பேருரு மட்டி, காண்பவர்கள் அனவரையும் கவரக்கூடிய வகையில் பல்வேறு வண்ணங்களில் அமைந்துள்ளன. இந்த வண்ண வேறுபாடு அதன் மெல்லிய சதைப்பகுதியுடன் இணைந்து வாழும் சூசேன்தல்லா காரணமாக இருக்கலாம் என்று ஆய்வறிஞர்கள் நம்புகின்றனர். இது 80 சதவீதம் அரக்கு, 10 சத
வீதம் ஊதா, 5 சதவீதம் பச்சை, 4 சதவீதம் இளஞ்சிவப்பு மற்றும் சிறிய அளவு சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றது.
ஆசிய மக்கள் இந்த சிறிய பேருரு மட்டிகளை உண்ணுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடல் மீன் அருங்காட்சியகத்தில் இவற்றுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இவற்றின் விலை சுமார் 2 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை அவற்றின் வண்ணங்களை பொறுத்து வேறுபடுகின்றது. மேற்கூறிய சில காரணங்களால் உலக அளவில் இவை அதிகளவில் மீனவர்களால் பிடிக்கப்படுகின்றன. இதன் விளைவாக நாளடைவில் இதனுடைய பல்லுயிரியல்பு குறையத் தொடங்கியது. இதனைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு (ஐமஇச) டி.மாக்ஸிமாவை அழிந்து வரக்கூடிய இனங்களுக்கான சிவப்பு பட்டியலில் 2004-ம் ஆண்டு சேர்த்தது. இந்தியாவின் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன்
கீழ் (நட்ங்க்ன்ப்ங்-1) டி.மாக்ஸிமாவை பாதுகாத்து வருகிறது. மேலும் மும்பை இயற்கை வரலாறு கூட்டமைப்பு (ஆசஏந), சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் பேருரு மட்டிகளை கணக்கிடுதல் மற்றும் பாதுகாத்தல் ஆய்வை மேற்கொண்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மையமும் அவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது'' என்கிறார் முனைவர் டி.டி.அஜீத்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...