மாற்றுத் திறனாளிப் பெண்களை மேசை, நாற்காலி போல நினைக்கிறார்கள்!
உயரம் நான்கடிக்கும் குறைவாக. வளைந்த கால்கள். நடக்கவே சிரமம். ஆனால் அவருடைய குரலில் உறுதியும், தெளிவும் தெரிகிறது. மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.










