டாக்டர் சித்ரா ராமமூர்த்திக்கு விருது!
கோவை, "தி ஐ பவுண்டேஷன்' மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்திக்கு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய இன்ட்ரா-ஆக்யுலர் இம்ப்ளேன்ட் மற்றும் ப்ரேக்டிவ் சங்கத்தின் மாநாட்டில் "டாக்டர் சுபோத் அ


கோவை, "தி ஐ பவுண்டேஷன்' மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்திக்கு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய இன்ட்ரா-ஆக்யுலர் இம்ப்ளேன்ட் மற்றும் ப்ரேக்டிவ் சங்கத்தின் மாநாட்டில் "டாக்டர் சுபோத் அகர்வால் தங்கப் பதக்கம்' வழங்கப்பட்டது. வழங்கியவர் தமிழ்நாடு ஆளுநர் டாக்டர் கே. ரோசையா. இந்த விருது கண்புரை மற்றும் லேசர் சிகிச்சையில் அகில இந்திய அளவில் சாதனை படைத்த கண் மருத்துவர் டாக்டர் சித்ரா ராமமூர்த்திக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் கண் மருத்துவர் டாக்டர் சித்ரா ராமமூர்த்திதான்.
டாக்டர் சித்ரா லாசிக் சிகிச்சை செய்வதில் இந்தியாவில் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். "தி ஐ ஃபவுண்டேஷனில்' க்ளுகோமா கிளினிக்கை நிர்வகித்து வரும் டாக்டர் சித்ரா, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் நேத்ர ஜோதி அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்து வருகிறார். கண்புரை மற்றும் லேசர் சிகிச்சை குறித்துப் பல பத்திரிகைகளில் விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் கண் சிகிச்சையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் பற்றி உரையாற்றி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...