குட்டீஸ் டிப்ஸ்!
சிறுகுழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால் காய்ந்த திராட்சையை கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டிக் கொடுத்தால், பலூனில் காற்று இறங்குவதுபோல் வயிறு உப்புசம் இறங்கிவிடும். எல்லாக்


சிறுகுழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால் காய்ந்த திராட்சையை கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டிக் கொடுத்தால், பலூனில் காற்று இறங்குவதுபோல் வயிறு உப்புசம் இறங்கிவிடும்.
எல்லாக் காய்கறிகளிலும் சிறிது சிறிது போட்டு, குக்கரில் வேக வைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து ரசம் செய்து அதில் சாதம் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மலச்சிக்கல் வராது.
பாலில் சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
சிறு குழந்தைகளுக்கு அருகில் பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால் குழந்தைகளுக்கு தும்மல், இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் வரக்கூடும்.
கைக்குழந்தைகள் பகலில் தூங்கும்போது ஈ தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். குழந்தையின் படுக்கையை சுற்றி ஐந்தாறு புதினா இலைகளை கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
குழந்தை அழும்போது காது பக்கம் கையைக் கொண்டு போய் வைத்துக் கொண்டால் அது காதுவலியாக இருக்கலாம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
நர்சரி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கூடையில் எப்போதும் ஒரு ஜட்டியை கவரில் போட்டு அனுப்பவும். குழந்தை பள்ளியிலேயே சிறுநீர் கழித்துவிட்டால் மாற்ற செளகரியமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...