சேனைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை:
சேனைக்கிழங்கு- 200 கிராம்
மிளகாய் வற்றல்- 4
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி
பெருங்காயம்- 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம்- 1
கடுகு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: முதலில் சேனைக்கிழங்கைத் தோல் சீவி, வாழைக்காய் வறுவலுக்கு நறுக்கும் மாதிரி மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு நறுக்கிய துண்டுகளைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். பிறகு சிறிது எண்ணெய்விட்டு வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றையும் சிவப்பாக வறுத்துக்கொண்டு மிக்ஸியில் கரகரப்பாக திரித்துக்கொள்ள வேண்டும். வறுத்தெடுத்த சேனைக்கிழங்கு துண்டுகளையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாகத் திரித்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாகச் சிவப்பாக வறுக்கப்பட்டவுடன் திரித்த கிழங்கை போட்டு வதக்கி, திரித்த பொடி, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக புரட்டி இறக்கிவைத்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
வெள்ளை முள்ளங்கி பச்சடி
தேவையானவை:
வெள்ளை முள்ளங்கி- 2
புளி- 1 பெரிய எலுமிச்சை அளவு
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 3
வெல்லம்- 1 அச்சு
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
புளியை தண்ணீர்விட்டு ஊறவைக்க வேண்டும். முள்ளங்கியை அரைக்க வேண்டும். புளியைக் கரைத்து, வெல்லம், உப்பு சேர்க்க வேண்டும். முள்ளங்கி விழுதையும் அதனுடன் சேர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி, முள்ளங்கி கரைசலைக் கலந்து கிளறி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

