பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஃபேஷியல் டிப்ஸ்

சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சைச்சாறை கலந்து நீராவி பிடித்தால்சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேறி முகம் மிருதுவாக மாறும். ஆவி பிடித்தபின் பன்னீரைக் கொண்டு முகத்தைத்

News image
Updated On :7 அக்டோபர் 2012, 1:11 pm

கீதா ஹரிஹரன்

* சூடான நீரில் சில துளிகள் எலுமிச்சைச்சாறை கலந்து நீராவி பிடித்தால்

சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேறி முகம் மிருதுவாக மாறும். ஆவி பிடித்தபின் பன்னீரைக் கொண்டு முகத்தைத் துடைப்பது நல்லது.

* சில துளி நல்லெண்ணெயோடு அதே அளவு தண்ணீர்த் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் நன்கு நுரைத்து வெண்மையான பசை போல் வரும். இதை முகத்தில் தேய்த்துத் தடவிக் கழுவினால் முகம் சுருக்கமின்றி பளபளப்பாக இருக்கும்.

* கண்ணைச் சுற்றி கருவளையம் உள்ளவர்கள் தக்காளி, எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.

* மூக்கின் ஓரங்களில் உள்ள கருப்புக்கு தினமும் ஆவி பிடித்து பஞ்சால் மூக்கின் ஓரங்களை துடைத்து எடுக்க வேண்டும்.

* முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* காய்ச்சாத பால் எடுத்து, அதில் சிறிது பஞ்சை நனைத்து முகத்தில் மென்மையாக ஒற்றி எடுத்து, அதன் பிறகு கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயிறு மாவு கலந்து முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

* இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு, உருளைக்கிழங்கு சாறு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.