திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

கோடி கதை பேசும் கொலு!

 வராத்திரிக்கு வீடுகளில் கொலு வைப்பது பலருக்கு ஒரு சம்பிரதாயமான விஷயம். தனது வீட்டில் கடந்த 29 வருடங்களாக கொலு வைக்கும் பழக்கத்தை விடாப்பிடியாக தொடர்ந்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:52 am IST

 வராத்திரிக்கு வீடுகளில் கொலு வைப்பது பலருக்கு ஒரு சம்பிரதாயமான விஷயம். தனது வீட்டில் கடந்த 29 வருடங்களாக கொலு வைக்கும் பழக்கத்தை விடாப்பிடியாக தொடர்ந்து கடைப்பிடித்து,வரும் குரோம்பேட்டையைச் சேர்ந்த திருமதி சாந்தி முருகேசன்ஆண்டுதோறும் வித்தியாசமான வகையில் கொலு வைத்து பலரது பாராட்டைப் பெற்றுள்ளார்.
 நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 9 நாட்களில் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி கடாட்சமும்,துர்க்கையை பூஜிப்பதால் தைரிய,வீரியமும்,சரஸ்வதியை வழிபடுவதால் கல்வியில் மேன்மையும்,அறிவாற்றலும் பெருகும் கடந்த ஆண்டு சிவபுராணம் பற்றி பார்வையாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் சிவன் தொடர்பான பொம்மைகளை கொலுவில் இடம் பெற வைத்த சாந்தி முருகேசன் வீட்டுக் கொலுவில் இந்த ஆண்டு விஷ்ணுவைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு அவதாரவடிவில் அமைந்துள்ள பெருமாள் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
 தசாவதாரத்தில் ராமர்,கிருஷ்ணர் அவதார காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை விளக்கும் பொருத்தமான பொம்மைகளைத் தேடி அலைந்து வாங்கி கொலுவில் இடம் பெற
 வைத்துள்ளார்.
 108 திவ்ய தேசங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்களின் ஸ்தல வரலாறுகளை சித்திரிக்கும் பொம்மைகள் கொலுவில் இடம் பெற்றுள்ளன. திருப்பதி பிரம்மோற்சவம்,காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை,ஆண்டாள் ஊஞ்சல் சேவை,சோளிங்கர் அமிர்தவள்ளி நாச்சியார் சமேதயோக நரசிம்மர்,ராமர் நாமம் பொறித்த பாறைகளைக் கொண்டு அனுமன் வானரப்படைகளுடன் உருவாக்கும் சேதுபந்தனம் உள்ளிட்டவை பற்றி விளக்கும் பொம்மைகள் கொலுவை அலங்கரிக்கின்றன.
 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் வகையில் கொலுவை உருவாக்கும் சாந்தி முருகேசன், கொலுவைக் காண வருகை தரும் பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்களுக்கு ஆன்மிகத்துடன் ஒழுக்க நெறிக் கதைகளையும் விளக்குவது பாராட்டதக்க முயற்சி. அதற்கென அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும்,முயற்சியும் வியக்கவைக்கிறது.
 ஆண்டுதோறும் கொலு வைப்பதற்கான புதிய கருவைத் தேர்வு செய்வது, அதற்குப் பொருத்தமான பொம்மைகள், சம்பந்தப்பட்ட புராணக் கதைப்புத்தகங்களை வாங்குவது உள்ளிட்ட பணிகளை நவராத்திரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விடுகிறார் சாந்திமுருகேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.