புத்தர் பிறந்த புண்ணிய பூமி
புத்தர் பிறந்த லும்பிணி, நேபாளத்தில் உள்ளது. சமீபத்தில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்று வந்தோம். தாயின் மடியில் சிறு குழந்தை அமர்ந்துள்ளதைப் போல, இமயமலையின் மடியில் நேபாளம் உள்ளது. தலைநகரமான காட்மண்டுவி


புத்தர் பிறந்த லும்பிணி, நேபாளத்தில் உள்ளது. சமீபத்தில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்று வந்தோம். தாயின் மடியில் சிறு குழந்தை அமர்ந்துள்ளதைப் போல, இமயமலையின் மடியில் நேபாளம் உள்ளது. தலைநகரமான காட்மண்டுவில் தங்கி பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்தோம். முதலில் பசுபதி நாதர்கோயில். பசுபதிநாதருக்கு நான்கு திசைகளில் உள்ள முகங்கள், நான்கு வேதங்களை குறிப்பது. ஐந்தாவது முகம் ஈசானம்- ஆகாயத்தை நோக்கி ஜோதிமயமாய் உருவம் இல்லாமல் இருப்பதுதான் அது. பிரளயத்துக்கு பின் பூமி மேலே எழுந்தபோது, முதலில் எழுந்த பகுதி காசி.
அடுத்தது காட்மண்டு. இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டு ஊருமே இறைவன் தானாக விரும்பி வந்து அமர்ந்த இடங்கள். இரண்டு ஊரிலும் இறந்தால் முக்தி என்று புராணங்கள் சொல்கின்றன.
பைரவர் சிறப்பு இரண்டு ஊரிலும் உண்டு. காசியில் கங்கை கரையில் இறந்தவர்களை எரியூட்டுவது போல இங்கும் பாக்மதி கரையில் இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.
அடுத்து பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள மற்றொரு கோயில் குகேஸ்வரி கோயில் சக்தி பீடங்களில் ஒன்று. இங்கு உத்திராட்சம் மரம் பார்த்தோம். புத்தநீல் கந்தா என்னும் இடத்தில், திருமால் பாம்பின் மேல் தண்ணீரில் பள்ளி கொண்ட கோலம். இதை புத்தர்கள், புத்தராகப் பாவித்து வழிபடுகிறார்கள். இந்துக்களும், புத்தமதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து வழிபடுகிறார்கள்.
பெரிய புத்தஸ்தூபியான சுயம்புலிங்கா பார்த்தோம். தெய்வசிலையை சுற்றி சிறு குழந்தைகளின் சிலைகள் உள்ளன. மருத்துவ வசதி இல்லாத பழங்காலத்தில், குழந்தைகளுக்கு நோய் வந்தால், இந்த தெய்வத்தை வேண்டி சரியாவதாக நம்பிக்கை. இப்போதும் இந்தப் பழக்கம் தொடர்கிறது.
சிறு வயது பெண் குழந்தையை தேர்ந்துத் எடுத்து, நாட்டு மக்கள் காளி தெய்வமாக வழிபடுகிறார்கள். இங்கு மட்டும்தான் சாலக்கிராமக் கல் கிடைக்கிறது. துளசி, விஷ்ணுவை கல்லாக மாறும்படி சபித்ததால், விஷ்ணு கல்லாக மாறியதுதான் சாலக் கிராமம் எனப்படுகிறது.
வீடுகளில் வைத்து பூஜை செய்யலாம். இங்கு உத்திராட்சம் மலிவாக வாங்கலாம். ஸ்படிகம், பவழம் மாலைகளும் கிடைக்கின்றன. அடுத்து பொக்காரா என்னும் இடத்துக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் மானக்கமனா என்ற சக்திபீடம் சென்று தரிசனம் செய்தோம். மூன்று மாலைகளை விஞ்ச் மூலம் கடந்து சென்று பார்த்தோம். அம்பாள் கூம்பு வடிவில் சிகப்பு பந்தல் கீழ் அமர்ந்துள்ளாள். எங்கும் அழகு, எதிலும் அழகு என்று பசுமையாக மலை நடுவில் கோயில் அமைந்துள்ளது.
அடுத்து பொக்காரா சென்று தங்கி, விந்தியவாசினி கோயில், பசுபதிநாதர் கோயில், ஏரியின் நடுவில் அமைந்துள்ளவராகி கோயில் சுரங்கத்தில் அமைந்துள்ள சுயம்புலிங்கம் கோயில், டேவிஸ்பால்ஸ் என்று பல இடங்களைப் பார்த்தோம்.
டேவிஸ் பால்ஸ் தண்ணீர் சீறிக் கொண்டு ஓடி வருவதைப் பார்க்க பரவசமாக இருக்கிறது. ஆனால் அருவி எங்கிருந்து வருகிறது? எங்கு செல்கிறது? என்பதைப் பார்க்க முடியவில்லை. அருவி நம் மீது சாரலை தெளிக்கும்போது, மனம் லேசாகிறது. சிறு குழந்தை போல் மனம் குதூகலிக்கிறது.
கடைசியாக புத்தர் பிறந்த இடமாகிய லும்பிணி கார்டன் சென்றோம். பழமை மாறாமல் புத்தர் பிறந்த இடத்தை வைத்துள்ளார்கள். பிறந்த இடத்தை விட்டு, சுற்றிலும் பெரிய கட்டடம் கட்டியுள்ளார்கள். அசோகர் கட்டிய ஸ்தூபி உள்ளது. மிகப் பெரிய தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளது.
இவற்றைப் பார்த்துவிட்டு நேபாள எல்லை பகுதியான சோனாலி சென்று தங்கி, இந்திய பகுதியான கோரக்பூர் சென்று கோரக்நாதர் கோயில் பார்த்தோம். சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய கோயில். வெள்ளை கோபுரங்கள், வண்ண கொடிகள் அசைந்து நம்மை வரவேற்கின்றன.
இறைவனே சீடனாக வந்து பளிங்கு சிலையாகக் கோயில் கொண்டிருக்கிறார். இவற்றைப் பார்த்த பின்பு, இரவு ரயிலில் சென்னைக்கு கிளம்பினோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...