சராசரி மனிதனால்தான் செய்ய முடியும் எனக் கருதப்படும் பல வேலைகளை மாற்றுத் திறனாளிகளும் செய்து சாதனை புரிந்து வருகின்றனர். அந்த மாற்றுத் திறனாளிகளிடையே,சமூக அக்கறை கொண்டவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் ஏ.நெல்சன். போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டவர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி வட்டம் இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், தனது மூன்று சக்கர சைக்கிளில், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து பல விழிப்புணர்வு பிரசாரங்களைச் செய்து வருகிறார். இதுவரை சுமார் எட்டாயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார்.
இவர் 19.12.2012ஆம் தேதி சிவகாசியிலிருந்து - சென்னை வரை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டும். பிரச்னைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் தற்கொலை செய்யக் கூடாது' போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளார். இது குறித்து
நெல்சன் கூறியதிலிருந்து...:
""நான் பிறக்கும்போதே இரு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு பிறந்தேன். எனது தாய் செல்வி. தந்தை அமிர்தராஜ். எனது பெற்றோர் தொடக்கத்திலிருந்து எனக்கு ஊக்கம் தொடுத்து வந்தனர். திருநெல்வேலியில் கூட்டுறவு பட்டப்படிப்பு படித்த பின்னர் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.காம். முடித்தேன். பள்ளியில் படிக்கும்போதே மரக்கன்றுகள் நடுதல், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் போடுதல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்துவந்தது. எங்களுக்கு விவசாயநிலம் நிறைய இருக்கிறது. வீட்டில் சும்மா இருந்தால் போதும் என பலர் கூறினார்கள். ஆனாலும், என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்துக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து வந்தது. இந்நிலையில் மூன்று சக்கர சைக்கிளிலே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டால் என்ன என யோசனை வந்தது. இதையடுத்து 10.6.2003 ஆம் தேதி, திருநெல்வேலியிலிருந்து, சென்னைக்கு, "ஊனம் ஒரு குறையல்ல' என்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்ய புறப்பட்டேன். 28 நாளில் சென்னை சென்றடைந்தேன்.
இரண்டாம் முறையாக, திருநெல்வேலியிலிருந்து, சென்னைக்கு மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கினேன். பின்னர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம். செய்யத் தொடங்கினேன்.
15.8.2005 ஆம் தேதி கன்னியாகுமரியிலிந்து சென்னை வரையும்,21.8.2006ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னை வரையும், 9.4.2007ஆம் தேதி தூத்துக்குடியிலிருந்து சென்னை வரையும், 8.2.2008ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னை வரையும், 9.2.2009ஆம் தேதி விருதுநகரிலிருந்து சென்னை வரையும், 21.10.2009 ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரையும், 2010ஆம் ஆண்டில் சிவகங்கையிலிருந்து சென்னை வரையும், 2.1.2012 ஆம் தேதி ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரையும் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து பிரசாரம் செய்துள்ளேன். எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய கிராமங்களுக்கும் சென்றதால் சென்னை செல்ல சுமார் 150 நாள்களுக்கு மேல் ஆனது. இந்த பிரசாரத்திற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் எனக்கு தினசரி ரூபாய் 150ஐ பிரயாணச் செலவுக்கு வழங்கியது.
மாற்றுத் திறனாளியான இவரின் வேண்டுகோள்: ""பெற்றோர் குறைபாடுள்ள குழந்தைகளை ஒதுக்கி விடக் கூடாது. அவர்களிடமும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். திருமண விழா, கோவில் விழா ஆகியவற்றுக்கு பிள்ளைகளை, பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத் திறனாளிக்கு, தான் குறைபாடுடையவன் என்ற எண்ணம் வராமல் வளர்க்க வேண்டும்''
என்பது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


