/

தமிழ் கற்றோரைக் கேலி செய்யக்கூடாது

1961-ம் ஆண்டு சென்னையில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தொடக்க விழா ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது

News image
Updated On :12 மே 2013, 9:56 am IST

1961-ம் ஆண்டு சென்னையில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தொடக்க விழா ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. டாக்டர். சுப்பராயன் தலைமை வகிக்க காமராஜர் மன்றத்தைத் தொடங்கி வைத்தார். எழுத்தாளர் பலரும் பேசினர். இறுதியாக பாவேந்தர் பாரதிதாசன் பேசினார். அப்போது அவர் சொன்னார்:
 ""பெருமக்களே! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர் என்போருக்குத் தமிழ் தெரிய வேண்டும். இங்கு பேசியவர்கள் அனைவரும் சாதி, மதம் என்ற பாகுபாடுகள் கூடாது என்று தெவித்தனர். இப்படி வாயளவில் கூறிவிட்டால் மட்டும் போதாது. அதை அவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், எழுத்தாளர்கள் எதற்கும் அஞ்சாது எத்தகு பயனும் கருதாது பாடுபட வேண்டும். தமிழ் கற்றோரைக் கேலி செய்வதும் கூடாது.''
 சுருக்கமான பேச்சுதான்! சுருக்கென்று மனதைத் தொடும் பேச்சாகவும் அது அமைந்துவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.