புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேவதைகளின் மறுபக்கம்!

மேடையில் இருவர் நடக்கும் அளவுக்கு ஒரு பாதை. வளைந்து நெளிந்து ஒயிலாக ஒரு பெண் நடந்து வருகிறார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2013, 8:52 am

ந. ஜீவா

மேடையில் இருவர் நடக்கும் அளவுக்கு ஒரு பாதை. வளைந்து நெளிந்து ஒயிலாக ஒரு பெண் நடந்து வருகிறார். முதுகைக் காட்டிக் கொண்டு அவர் திரும்பிச் செல்லும்போது இன்னொருவர் நடந்து வர ஆரம்பிக்கிறார். இப்படி அலை அலையாக வந்து போகிறார்கள். ஒவ்வோர் முறையும் ஒவ்வொருவிதமான ஆடை. அலங்காரங்கள். திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க வைக்கிறது ஃபேஷன் ஷோக்களைக் காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். ரொம்பவும் கவர்ச்சியாக, இளமையாக, புதுமையாக வந்து போகிற அந்தப் பெண்களின் வாழ்க்கை?
 
 ""மாடலிங் துறையில் இருப்பவர்களின் உலகம் கவர்ச்சிகரமானது. அவர்களைப் பிறர் தேவதைகளைப் போல நடத்துகிறார்கள் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மாடலிங் உலகம் கவர்ச்சிகரமானதுதான். ஆனால் அந்தக் கவர்ச்சியையும் மீறி, நிறைய சுமைகள்... மன அழுத்தங்கள் உள்ள துறை இது.
 எங்களுடைய தொழில் எங்களுடைய தோற்றத்தை - அழகை- அடிப்படையாகக் கொண்டது. தோலின் வனப்பும், கூந்தலின் அழகும், உடல் அழகும்தான் எங்களுக்கு மூலதனம். இவை இல்லாவிட்டால்... இல்லாவிட்டால்... நாங்கள் தூக்கியெறிப்படுவோம். நிச்சயமில்லாத வாழ்க்கை. இந்தப் பயத்தில்தான் நாங்கள் வாழ்ந்தாக வேண்டும். இருந்தும் எங்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. நாங்கள் கவர்ச்சியாகத் தோற்றமளிப்பதற்குத் தேவையான ஊதியம் தரப்படாவிட்டால், எப்படித் தொடர்ந்து நாங்கள் இந்தத் துறையில் இருக்க முடியும்?'' என்று கேட்கிறார் நேத்ரா ரகுராமன். கடந்த பத்து ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கிறார்.
 ""பொருளாதார மந்தநிலை வந்தால் வேறு எந்தத் துறை பாதிக்கப்படுகிறதோ இல்லையோ, முதலில் பேஷன் துறைதான் பாதிக்கப்படுகிறது'' என்கிறார் அவர்.
 நேத்ரா ரகுராமனைப் போல மாடலிங் துறையில் இருப்பவர் அர்ச்சனா அகில் குமார். ""மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல சம்பளம் அளிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் மாடல்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது '' என்கிறார்.
 மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கென்று சுயமான அடித்தளம் இல்லை. அவர்கள் பிறரைச் சார்ந்திருப்பவர்கள். பல்வேறு டிசைனர்களின் கீழ்- ஏஜென்ஸிகளின் கீழ் - அவர்கள் வாய்ப்பளித்தால் மட்டுமே - வாழ முடியும் என்ற நிலை அவர்களுக்கு.
 ""மாடலிங் துறையில் இருக்கும் எங்களுக்கு மாடலிங் ஒன்று மட்டும்தான் தெரியும். அது ஒன்றுமட்டும்தான் எங்களுடைய வருமானத்துக்கான வழி. வணிக விளம்பரங்களுக்குப் பெரும்பாலும் எங்களைப் பயன்படுத்துவதில்லை. சினிமா நடிகர்ளையோ, கிரிக்கெட் வீரர்களையோ பயன்படுத்துகிறார்கள். மாடலிங்துறையில் உள்ளவர்களைப் பயன்படுத்துவது மிகவும் குறைவு'' என்கிறார் அலீஸô ராட், இன்னொரு மும்பை மாடல்.
 பேஷன் ஷோக்கள் நடந்தால்தான் இந்த மாடல்கள் மேடையில் நடை பயில முடியும். நிறைய பேஷன் வாரங்களை ஆண்டு முழுவதும் கொண்டாடினாலும் ஒரு சாதாரண மாடல் ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7 லட்சம் - 8 லட்சம் வரைதான் சம்பாதிக்க முடிகிறது என்கிறார்கள். அதே சமயம் ஒரு சில அழகுநடை பயிலும் பிரபல மாடல்கள் மட்டுமே இதைப் போல ஐந்து மடங்கு ஊதியம் பெறுகிறார்கள்.
 இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண் மாடல்களை விட ஆண் மாடல்களுக்கு வருமானம் குறைவு. மேலும் ஆண்கள் பங்குபெறும் ஃபேஷன் ஷோக்களும் மிகக் குறைவு.
 ""பெண் மாடல்களுக்குக் கொடுக்கும் அளவுக்குப் பணத்தை ஆண் மாடல்களுக்குப் பல டிசைனர்கள் கொடுப்பதில்லை. ஒரு பெண் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ஒரு ஷோவுக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆண் மாடலுக்கு வெறும் ரூ.30 ஆயிரமே தரப்படுகிறது. உலகத்திலேயே ஆண்களைவிட பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துறை இதுவாகத்தான் இருக்கும்'' என்று குமுறுகிறார் மாடலிங் துறையில் எட்டு ஆண்டுகளாக இருக்கும் ஆண் மாடல் அமித் கன்னா.
 ""அதிலும் நீண்டகாலம் எல்லாம் இந்தத் துறையில் ஒருவர் இருக்க முடியாது. அதிகபட்சம் ஐந்து ஆறு ஆண்டுகள் நல்ல வருமானத்துடன் இருக்கலாம். அதற்குப் பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும். அப்புறம் இந்தத் தொழிலை விட்டு ஒதுங்க வேண்டியதுதான். யார் ரொம்ப நம்பிக்கையுடன் உழைத்து, இத்துறையில் ஏதாவது சாதிக்கிறாரோ, அவர் மட்டுமே இத்துறையிலிருந்து வேறு பல துறைகளுக்குப் போக முடியும். மீதியுள்ளவர்கள் நொந்து நூலாக வேண்டியதுதான்'' என்கிறார் அமித் கன்னா.
 ""மாடல்கள் பேஷன் உலகில் சில காலமே இருக்க முடிகிறது. அந்தக் குறைந்த காலத்திலும் மிகக் குறைந்த வருமானம் என்றால் எப்படிப் பிழைப்பது? ஆனால் எங்களைப் பயன்படுத்திக் கொண்டு தொழில் நடத்தும் டிசைனர்கள்} ஏஜென்ஸிகள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். நீண்ட காலம் துறையில் இருக்கிறார்கள்'' - இப்படி புலம்புகிறார்கள் மாடலிங் துறையில் உள்ளவர்கள்.
 ""கடந்த பத்து ஆண்டுகளாக நான் மாடலிங் துறையில் இருக்கிறேன். முதலில் இருப்பதை விட நல்லவிதமான மாற்றங்கள் இத்துறையில் தென்படுகின்றன. ஒரு மாடலிங் ஷோவில் எது முக்கியமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் டிசைனர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு, நிறைய கவர்ச்சியுடன், நிறைய "வெளிப்படை'யாக இருக்க வேண்டியிருக்கிறது'' என்கிறார் தீப்தி.
 ""டிசைனர் உருவாக்கும் சில ஆடைகள் பேஷன் ஷோவுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதை அணிந்து கொண்டுதான் நாங்கள் கவர்ச்சியாகத் திரிகிறோம். அந்த ஆடைகளை விற்பனை செய்வதில்லை. சில ஆடைகள் மட்டுமே மக்கள் வாங்குவதற்காக வடிவமைக்கிறார்கள். கடைகளில் விற்கிறார்கள்'' என்றும் சொல்லும் தீப்தி, ""ஒரு நல்ல சூப்பர் மாடலாக தொடர்ந்து இருப்பது மிகவும் சிரமம்''
 என்கிறார்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.