அன்பே அடிப்படை!

அன்பே அடிப்படை!

ஓர் இளம் பெண். அவளைச் சுற்றிலும் அரக்கர்கள் போல தலையில் கொம்பு வைத்துக் கொண்டு மனிதர்கள். ஓர் ஆண். ஒரு பெண். ஆணின் கையில் புல்லாங்குழல். சேறும் சகதியுமான நிலத்தில் ஏர் பூட்டப்பட்ட எருதுகளை விரட்டும் விவசாயி.

இவையெல்லாம் சென்னை லலித் கலா அகாடெமியில் ஸ்டுடியோ பலாட்úஸô ஏற்பாடு செய்த ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களில் சில.

ஓவியம் என்றால் யாருக்கும் புரியாமல் இருப்பதற்காக வண்ணங்களை எடுத்து கேன்வாஸில் வீசியெறிந்திருப்பார்களே, அது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நம்மைச் சுற்றிலும் உயிரோடு உலவிக் கொண்டிருக்கிற மனிதர்களின் உயிருள்ள வாழ்க்கையை இந்த ஓவியங்கள் சித்திரிக்கின்றன. நமக்குத் தெரிந்த உலகம் நமக்கே புதுமையாக இருப்பதுதான் இந்த ஓவியங்களின் சிறப்பு.

இவற்றை வரைந்த கே.ஆன்டனி, ஓவிய நுண்கலையில் பட்டம் பெற்றவர். ஐடிசி நிறுவனத்தில் டிசைனராக இருக்கிறார். அவரிடம் பேசினோம்:

"ஓவியமோ, வேறு எந்தக் கலையோ மக்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும். அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தூண்டலை அளிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே நான் கடந்த 25 வருடங்களாக ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறேன்.

எனது ஓவியங்களில் பெரும்பாலும் அடித்தட்டு மனிதர்களைத்தான் சித்திரித்திருக்கிறேன். மனித வாழ்க்கைக்கு அன்பு அடிப்படை. இப்போது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்டன. இந்நிலையில், அன்பின் வலிமையை வரக்கூடிய இளம்தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துவிட முடியாது. பறவைகள், மலர்கள், மரங்களிலிருந்து மனிதனைத் தனியாகப் பார்க்க முடியாது. இவற்றையும் சொல்வதுதான் என் ஓவியங்கள்.

கருவுற்ற பெண்ணின் வயிற்றில் முகம் வைத்து பாசமுடன் இருக்கும் கணவன் படம், பிறக்கப் போகும் குழந்தையிடம் தாயைப் போலவே தந்தைக்கும் பாசம் இருக்கிறது என்று சொல்கிறது. ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும் நேரத்தில் பெண்ணின் தோளில் ஒரு பறவை உட்கார்ந்து கொண்டு இருப்பதைப் போன்ற ஓவியம், கையில் மலர் ஒன்று இருப்பதைப் போன்ற ஓவியம் எல்லாம் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பைச் சொல்பவை. ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும்போது மனதில் எழும் எல்லையில்லாத மகிழ்ச்சியைச் சொல்பவை.

இதில் நான் வரைந்துள்ள நஐல ஈஉயஐகந என்ற ஓவியம் டில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைச் சித்திரிக்கிறது. இளம் பெண்ணைச் சுற்றி அரக்கர்கள் இருப்பதைப் போல வரைந்திருந்தேன். அந்தச் சகோதரியைப் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்ற செய்தி என்னை மிகவும் பாதித்துவிட்டது. அழுதுவிட்டேன்.

இதுபோன்ற கொடுமைகள் வேறு யாருக்கும் நிகழக் கூடாது. ஓர் ஓவியன் என்ற முறையில் நான் செய்ய முடிந்த சமூக விழிப்புணர்வுச் செயல்தான் இந்த ஓவியம்.

ஓவியக் கண்காட்சிகளில் ஓவியங்கள் விற்பனையானால் அந்தப் பணத்தை ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப் போகிறேன்'' என்கிறார் கே.ஆன்டனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com