எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆரோக்கிய சமையல்

கொள்ளு, பயறு இரண்டையும் லேசாக வறுத்து அரைநாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரில் உப்பு சேர்த்து

News image
Updated On :30 நவம்பர் 2014, 6:59 am

கொள்ளு முழு பயறு சுண்டல்

தேவையானவை:

கொள்ளு - 50 கிராம்

முழு பயறு - 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

தேங்காய் - அரை மூடி

கொத்துமல்லி - 1 பிடி

இஞ்சி - 1 துண்டு

எலுமிச்சம்பழம் - பாதியளவு

எண்ணெய்,உப்பு - தேவையானது.

செய்முறை: கொள்ளு, பயறு இரண்டையும் லேசாக வறுத்து அரைநாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு குக்கரில் உப்பு சேர்த்து வேக விட வேண்டும். சூடு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடியவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கி கொள்ளும், பயறும் போட்டு கிளற வேண்டும். பிறகு  தேங்காய் துருவல் போட்டு நன்றாகக் கிளறி கீழே இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து நறுக்கிய கொத்துமல்லியைத் தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.