இன்றும் பல ஊர்களில் புதிய கோயில்கள் கட்டுமானப்பணி அல்லது புனரமைப்பு பணி என பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கோயில்களை உருவாக்குவதும், கோயில்களில் உள்ளசிலைகளை வடிவமைப்பதும், பிரகாரங்கள் உள்ளிட்டவை அமைப்பதும் சவாலான பணியாகும். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மல்லி கிராமத்தில் முருகன் ஆசாரி கல் சிறப்பக்கலைக்கூடம் என்ற கூடத்தை ஆர்.எம்.சீனிவாசன் நடத்தி வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் பல புதியகோயில்களை நிர்மாணம் செய்ய கல்தூண்கள், கல்படிக்கட்டுகள், பிரகாரங்கள், மூலஸ்தான சிலைகள் உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறார். சீனிவாசனிடம் இது குறித்து கேட்டோம்:
""எனது தாத்தா ராமசுப்பு ஆசாரி கல்பாலங்கள் கட்டும் தொழில் செய்து வந்தார்.
குற்றாலம் பிரதான அருவியில் கல்லால் ஓர் ஆர்ச் அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தால் அருவியில் குளிக்க தடைவிதித்து
விடுவார்கள். அந்த ஆர்ச்சினை அமைத்தது எனது தாத்தாதான். பின்னர் எனது தந்தை முருகேசன் ஆசாரி கல் சிற்ப வேலைபாடுகளைக் கற்று அறிந்து சிற்பக் கலைக்கூடத்தை
அமைத்தார்.
தற்போது நான் சுமார் 30 ஆண்டுகளாக இந்த கல் கலைக்கூடத்தை நடத்தி
வருகிறேன்.
சிலைகள் மற்றும் தூண்கள் வடிவமைப்பதற்கு நாகர்கோவிலிருந்து கற்களை வாங்குகிறோம்.
பின்னர் இயந்திரம் மூலம் அதனை தேவைக்கு ஏற்ப வெட்டி, இயந்திரம் மூலம் பாலீஸ் செய்து சிற்பங்கள், துண்கள் ஆகியவற்றைச் செய்கிறோம்.
முன்பு அனைத்தும் கையினால்தான் வேலை செய்ய வேண்டியதிருந்தது. தற்போது இயந்திரம் வந்துவிட்டதால் பல வேலைகள் இலகுவாகிவிட்டன.
நாங்கள் சிற்ப சாஸ்திரப்படி கோயில் சிறப்பங்களை உருவாக்குகிறோம்.
ஒரு கோயிலில் எவ்வளவு இடம் உள்ளது. அந்த இடத்தில் எந்தச் சிலை வைக்கப் போகிறோம் என கூறிவிட்டால் அந்தச் சிலையை நாங்கள் உருவாக்கி கொடுத்துவிடுவோம்.
கோயில் நிலை கல்கள், தூண்கள், மூல ஸ்தானம், அர்த்த மண்டபம், கொடிமரம், மகாமண்டபம் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கல்லினால் செய்து கொடுக்கிறோம்.
என் மாமனார் சி.தியாகராஜன் ஸ்தபதி. அவர் கோயில் வாஸ்து கற்றவர். ஒரு கோயிலில் மூல ஸ்தானம் எப்படிஇருக்க வேண்டும்? பிரகாரங்கள் எப்படி அமைக்க வேண்டும்? கல்தூண்கள் எங்கு அமைக்க வேண்டும்? கல்தூண்களில் எவ்வித வேலைப்பாடு இருக்க வேண்டும்? பீடம் எவ்வளவு உயரத்தில் அமைக்க வேண்டும்? என கோயில் தொடர்பான அத்தனை வாஸ்துகளையும் அவரிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.
என்னிடம் சுமார் 40 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
எனது தந்தை காலத்திருந்து வேலை செய்து வருபவர்களும் உண்டு. கோயில் தொடர்பான வேலையாக இருப்பதால் தொழிலாளர்கள் தினசரி குளித்து சுவாமி கும்பிட்டுவிட்டுத்தான் வேலையைத் தொடங்க வேண்டும் என கூறியுள்ளேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


