கால்களில் உள்ள கருமையை நீக்கி, பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ளவும், பாத வெடிப்பை குணப்படுத்தவும் சில எளிய வழிகள்:
எலுமிச்சையைத் துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அதை கால்கள் மற்றும் பாதங்களில் 10-15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கால்களில் உள்ள கருமை நீங்கிவிடும்.
பாதங்களுக்கான "ஸ்கரப்' செய்வதற்கு, 3 மேசைக்கரண்டி ஓட்ஸ், 2 மேசைக்கரண்டி சர்க்கரை மற்றும் 2 மேசைக்கரண்டி பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஆரஞ்சு தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் 1 மேசைக்கரண்டி ஆரஞ்சு தோல் பொடி மற்றும் 1 மேசைக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்து கழுவலாம்.
4 மேசைக்கரண்டி பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் நிரம்பியுள்ள வாளியில் சேர்த்து கலந்து, அதில் சிறிது ஷாம்பு சேர்த்து கலந்து, அந்த கலவையில் கால்களை 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும், கால்களில் உள்ள கருமை மறைந்து, கால்கள் பொலிவோடு இருக்கும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைந்துவிடும்.
எலுமிச்சை, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசைக்கரண்டி கிளிசரின் மற்றும் 12 மேசைக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் கால்களில் தடவி சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கி விடுவதோடு, கால்களில் உள்ள கருமையும் நீங்கிவிடும்.
உங்களது பகுதியில் "சாதனைப் பெண்கள்' உள்ளனரா? அவர்களது அனுமதியுடன் அவரைப் பற்றிய கட்டுரையை எழுதி, அவருடைய புகைப்படத்துடன் அனுப்புங்கள். சிறந்த கட்டுரை "மகளிர் பகுதி'யில் இடம்பெறும். பிரசுரமாகும் சிறந்த கட்டுரைகளுக்குச் சன்மானம் உண்டு.கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:
கொண்டாட்டம் (மகளிர் பகுதி) தினமணி, எக்ஸ்பிரஸ் கார்டன்,
29, 2-வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 058.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


