ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டிமென்சியாவுக்குச் சிறப்பு மருத்துவ மையம்!

ஞாபக மறதி ("டிமென்சியா') குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரைக் கவனிப்போருக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் அளிக்கும் சிறப்புப் பயிற்சி மையம் சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2015, 6:34 am

ஞாபக மறதி ("டிமென்சியா') குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரைக் கவனிப்போருக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் அளிக்கும் சிறப்புப் பயிற்சி மையம் சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மனச் சிதைவு ஆராய்ச்சி மையத்தின் ("ஸ்கார்ஃப்') மனநல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் கூறியது:

""கடந்த 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3.75 லட்சம் முதியோர் ஞாபக மறதிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 சதவீதம் பேருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் உரிய மருத்துவர்களிடம் சென்று உடல், மனரீதியான பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கேற்ற மருத்துவ முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மருந்துகள், மருத்துவ ஆலோசனைகள் மூலம் ஞாபக மறதி பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும்.

ஞாபக மறதிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரைப் பரிசோதனை செய்யவும், அவர்களைக் கவனித்துக் கொள்வோர், செவிலியர்கள், தன்னார்வ அமைப்பினர் ஆகியோர் முறையான பயிற்சிகள், ஆலோசனைகள் பெறுவது அவசியம். அதற்காக சென்னையில் உள்ள மனச் சிதைவு ஆராய்ச்சி மையம் ("ஸ்கார்ஃப்') சார்பில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை உதவியுடன் சென்னை கிரீம்ஸ் சாலையில் மருத்துவ ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அதற்காக அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவில் முதல் கட்டமாக முதியோருக்கான மனநல மருத்துவ நிபுணர், உளவியல் நிபுணர், பொது சுகாதார நிபுணர், செவிலியர் உள்பட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புக்கு: 044}26151073

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.