நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

"பாலியேட்டிவ் கேர்' சிகிச்சை!

புற்று நோய், பக்கவாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் வலி தாங்க முடியாது.

News image
Updated On :6 ஜூலை 2015, 9:54 am

ஸ்ரீதேவி குமரேசன

புற்று நோய், பக்கவாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் வலி தாங்க முடியாது. அதிகப்படியான இந்த வலியைப் போக்குவதற்காகவே "ஆர்.எம்.டி. பெயின் அண்ட் பாலியேட்டிவ் கேர் டிரஸ்ட்' என்ற ஓர் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார் மருத்துவர் ரிபப்ளிகா. குடியரசு தினத்தன்று பிறந்ததால் இவருக்கு "ரிபப்ளிகா' என்று பெயர் வைத்தனராம் இவரது பெற்றோர். தி.நகரில் உள்ள இந்த மருத்துவமனையில் அவரைச் சந்தித்தோம்:

""ஆரம்பத்தில் நான் மருத்துவம் படித்து முடித்ததும், மகப்பேறு மருத்துவமும், பொது மருத்துவமும்தான் பார்த்து வந்தேன். அப்போதே படுத்த

படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்கள் வீடுகளுக்கே சென்று சிகிச்சை பார்ப்பேன். அதுமட்டுமின்றி வீட்டில் வைத்துப் பாராமரிக்க முடியாத, ஆதரவு இல்லாதவர்களுக்கும் அவ்வப்போது இலவசமாக சிகிச்சை அளித்து வந்தேன். அவர்கள் மனதிற்குள் இருந்த பாரமும், வலியும் என்னை மிகவும் பாதித்தது. இதனால் அவர்களை நானே பராமரிக்கவும் ஆரம்பித்தேன்.

அந்தச் சமயத்தில் புற்றுநோயால் பாதித்த ஒரு கூலித் தொழிலாளியை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவருக்கு கட்டி வந்து ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். துர்நாற்றம் வேறு. இதனால் அவர் அருகில் வரவே யாரும்

விரும்பவில்லை. அவர் வலி தாங்காமல் ஒருநாள் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்திருக்கிறார். இதுதவிர இன்ஃபெக்ஷன் ஏற்பட்டதால் வேறு பிரச்னைகளும் சேர்ந்து கொண்டன. ஐந்து நாள்கள் வைத்துப் பராமரித்தோம். கடைசி நாள்களில் வலியில்லாமல் நிம்மதியாக இருந்தார். கடைசியில் இறந்துவிட்டார். இரண்டு குழந்தைகளோடு அவர் மனைவியைப் பார்த்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது. சாதாரண வலி மாத்திரைகூட வாங்க வசதியில்லாமல் அவர்கள்பட்ட கஷ்டம் என்னைப் பாதித்தது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்த அறக்கட்டளை மருத்துவமனையை 1994-இல் தொடங்கினேன்.

இதற்கிடையில் என் நண்பரின் மூலம் "பாலியேட்டிவ் கேர்' பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் தெரிந்துகொள்ள அதைப்பற்றி நிறைய விசாரிக்கத் தொடங்கினேன். அப்போது கேரளாவில் "பாலியேட்டிவ் கேர்' ட்ரெயினிங் கொடுப்பதாகத் தெரிந்து அங்கு சென்று படித்துவிட்டு வந்தேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்டத்தில் கீமோதெரபி கொடுப்பார்கள், அதனுடன் சேர்த்து மற்ற சிகிச்சைகளும் கொடுக்கும்போது அதிகப்படியான வலியும் இருக்கும். இந்நிலையில் அவர்கள் வலி தாங்க முடியாமல் செத்துப் போனாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாலியேட்டிவ் கேரில் நல்ல தீர்வு கிடைக்கும். இந்த பாலியேட்டிவ் கேர் என்பது என்னவென்றால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது வேறு நோயினால் பாதித்து அதிகப்படியான வலியில் உள்ளவர்களுக்கோ வலியைக் குறைத்து, அவர்கள் வாழும் வரை வலி இல்லாமல் வாழவைப்பதுதான் பாலியேட்டிவ் கேர். இதுவும் அலோபதி மருத்துவம்தான்.

பக்கவாதம் வந்தவர்கள், நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான மஞ்சள் காமாலை, ஹெபடைட்டிஸôல் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏற்கெனவே எடுத்து வரும் மருத்துவ சிகிச்சையோடு இதனையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். டயாபடீஸ் இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை அளிப்போம். பொதுவாக மருத்துவர்களுக்கு நோயைக் குணப்படுத்துவதே குறிக்கோள். எங்களுக்கோ நோயாளிகளின் வலியைக் குறைப்பதுதான் முக்கியம்.

சமீபத்தில் மார்பகப் புற்றுநோயோடு என்னிடம் ஒரு பெண்மணி வந்தார். வலியால் அந்தப் பெண் நான்கு மாதமாகத் தூங்கவில்லை என்றார். இந்தச் சிகிச்சையின் மூலம் நான்கு நாள்கள் நிம்மதியாகத் தூங்கினார். அவரது வலியைக் குறைக்க முடிந்ததில் எங்களுக்கும் ஒரு நிம்மதி.

சிலர் நோய் முற்றிய நிலைமையில்தான் பாலியேட்டிவ் கேரைத் தேடி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறு, நோயைக் கண்டறியும்போதே, நோயாளிக்கு அதன் தீவிரத்தை அறிவுறுத்த வேண்டும். குணப்படுத்துவது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதையெல்லாம் புரிய வைத்துவிட்டால் அதன்பிறகு அவர்களோடு உடல் வலியைக் குறைப்பது சுலபமாகிவிடும்.

பாலியேட்டிவ் கேருக்காக நாங்கள் உபயோகப்படுத்தும் மருந்தை அரசு அனுமதி இருந்தால் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். 3 மாதம் வரைதான் உயிரோடு இருப்பார் என்று நினைத்தவர்கள்கூட இதைச் சரியான முறையில் பயன்படுத்தினால் சிலசமயம் 3 ஆண்டுகள் வரையிலும் உயிரோடு இருந்திருக்கிறார்கள். இது எங்களது அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மை.

தற்போது எங்களது "ஆர்.எம்.டி. பெயின் அண்ட் பாலியேட்டிவ் கேர்' மூன்று இடங்களில் இயங்கி வருகிறது. சென்னையில் மதுரவாயல், பெரியபாளையம் மற்றும் மதுரையில். இதையடுத்து விரைவில் சென்னை அருகே குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் வழியில் அமரம்பேடு என்ற இடத்திலும் ஒரு மருத்துவமனையைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களோடு மேலும் நான்கு மருத்துவர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் விருப்பப்படும் பெண்களுக்கு நர்ஸ் ட்ரெயினிங் கொடுத்து வீடுகளுக்குச் சென்று நோயாளிகளைப் பராமரிக்கவும் கற்றுத் தருகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.