தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உழைத்தோம் - முன்னேறினோம்!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும், படித்திருந்தால் ஏதாவது வேலைக்கு போய்ச் சம்பாதித்திருப்பேன் என்று நொந்து கொள்ளும் பெண்களுக்கும், அவர்களுக்கு தெரிந்த சமையற்கலையைக் கொண்டே வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க வழி வகுத்து தருவதுடன், முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் "இன்ஸ்டண்ட் பொடி' வகைகள் தயாரிப்பில் வெற்றி பெற்றிருக்கும் கலாவதி. சென்னை, சூளைமேட்டில் இருக்கும் இவரைச் சந்தித்தோம்:

News image
Updated On :12 ஜூலை 2015, 9:47 am

ஸ்ரீ

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும், படித்திருந்தால் ஏதாவது வேலைக்கு போய்ச் சம்பாதித்திருப்பேன் என்று நொந்து கொள்ளும் பெண்களுக்கும், அவர்களுக்கு தெரிந்த சமையற்கலையைக் கொண்டே வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க வழி வகுத்து தருவதுடன், முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் "இன்ஸ்டண்ட் பொடி' வகைகள் தயாரிப்பில் வெற்றி பெற்றிருக்கும் கலாவதி. சென்னை, சூளைமேட்டில் இருக்கும் இவரைச் சந்தித்தோம்:

""என் மாமனார் காலத்தில் இருந்து 40 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் மிளகாய்-மல்லி, கோதுமை போன்ற தானியங்களை அரைக்கும் அரவை மில் வைத்திருந்தோம்.

நான் திருமணமாகி வரும்போது எங்களிடம் 11 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் நாளடைவில் வேலை ஆட்கள் வருமானம் போதவில்லை என்று வேறு வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். இதனால் எங்களுக்கும் வருமானம் குறைந்து வறுமை நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் என் கணவர் கவலையில் மனமொடிந்து அடுத்து என்ன செய்வதென்று புரியாதநிலையில் இருந்தார். இந்த நிலையில் இருந்து அவரை எப்படியாவது மீட்டெடுத்து வரவேண்டும் என்று நினைத்தேன்.

அந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வேலைக்குப் போகும் பெண்கள் சிலர், ""கோதுமை, மிளகாய் மல்லியெல்லாம் சுத்தம் செய்து அரைப்பதற்கு எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் நீங்கள் அரைத்து தருகிறீர்களா?'' என்று கேட்டனர்.

சரியென்று முதலில் 5 கிலோ வீதம் அரைத்து கொடுத்தோம். அது அவர்களுக்கு பிடித்துப் போக தொடர்ந்து எங்களிடம் வேலைதர ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான் தோன்றியது. வேலைக்குப் போகும் பெண்கள் பலருக்கும் இதுபோன்ற பிரச்னை இருக்குமே, அதனால் இதையே தொழிலாக செய்யலாம் என்று ஆரம்பித்தோம். என் கணவருடன் இணைந்து நானும் மாவு மில்லில் நின்று அரைக்கத் தொடங்கினேன். ஓரளவு நல்ல வருமானமும் கிடைக்க ஆரம்பித்தது. இருந்தாலும் பிள்ளைகள் மேல் படிப்புக்கு தயாராகிவிட்டதால் இன்னும் அதிகமான வருமானம் தேவைப்பட்டது. அதனால் மேலும் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்தபோது எங்களுக்கு இந்த அரவைத் தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் அதைச் சார்ந்தே யோசித்தபோது, இன்ஸ்டண்ட் பொடி வகைகள் தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

ஏனென்றால் இன்ஸ்டண்ட் பொடி வகைகள் அவ்வளவாக வராத காலகட்டம் அது. அதனால் குழம்பு மிளகாய்த் தூள், கோதுமை மாவு, இடியாப்பப் பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி, அடை மிக்ஸ், இட்லிப் பொடி எனப் பலவகையான பொடிகள் தயார் செய்து லேபிள் எல்லாம் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. தற்போது மசாலாப்பொடி, கொழுக்கட்டைப் பொடி, பஜ்ஜி மிக்ஸ் முதல் சீயக்காய்ப் பொடி, ஹேர் ஆயில் என 40 வகைகள் தயாரிக்கிறோம்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் இதுவரை எங்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று என் பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து, திருமணம் முடிந்து வெளியூரில் செட்டில் ஆகி நல்ல வேலையிலும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

மேலும், எங்களைப் போல் வறுமை நிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இன்ஸ்டண்ட் பொடி வகைகள் தயாரிப்புகளுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.