தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

க்ரோஸாவில் கலைப் பொருட்கள்

பேஷனாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், கிரியேட்டிவ் திறமையுள்ளவர்களுக்கும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்'' என்கிறார் கைவினைக் கலைஞர் சுவர்ண லட்சுமி.

News image
Updated On :19 ஜூலை 2015, 12:41 pm

ஸ்ரீ

பேஷனாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், கிரியேட்டிவ் திறமையுள்ளவர்களுக்கும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்'' என்கிறார் கைவினைக் கலைஞர் சுவர்ண லட்சுமி. கடந்த 30 ஆண்டுகளாக ஏராளமான கைவினைப் பொருள்களை விதவிதமாகத் தயாரித்து வரும் இவருக்கு கடந்த 2004 - இல் சிறந்த கைவினைக் கலைஞருக்கான "ராஜீவ் காந்தி விருது' கிடைத்திருக்கிறது. அவருக்கு இந்தத் துறையில் ஆர்வம் வந்தது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

""நான் சின்ன வயதாக இருக்கும்போது என் பெரியம்மா எந்நேரமும் க்ரோஸாவினாலான ஸ்வெட்டர் பின்னுவது, கூடை பின்னுவது, கைவினைப் பொருள்கள் செய்வது என விதவிதமான கைவேலைகளைச் செய்து கொண்டிருப்பார். இதைப் பார்த்து வளர்ந்ததினால் எனக்கும் சின்ன வயதிலிருந்தே கைவினைப் பொருள்கள் செய்வதில் ஆர்வம். இதனால் அவரிடம் கைவினைப் பொருள்கள் செய்யப் பயின்றேன்.

அதன் பிறகு புது புது டிசைன்களில் ஸ்வெட்டர் பின்னிப் பார்ப்பதும், கூடை போடுவதுமாகவே இருப்பேன். புது டிசைன் ஏதாவது முயற்சி செய்யும்போது என் தந்தை நிறைய ஐடியா கொடுத்து உதவியிருக்கிறார். என் அம்மாவும் நிறைய ஆலோசனை தந்திருக்கிறார்.

திருமணம் முடிந்து என் கணவர் வீட்டுக்கு வந்த பின் கிடைக்கும் நேரங்களில் கைவினைப் பொருள்கள் செய்து வந்தேன். இதைப் பார்த்த என் கணவர், ""இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது, முறையாகக் கற்றுக்கொள்'' என்று அருகில் இருந்த பயிற்சி வகுப்புக்கு அனுப்பினார்.

அதன் பின்னர் வீட்டில் இருந்தபடியே சின்னதாக கைவினைப் பொருள்கள் செய்து வந்தேன். இதை அறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளோர் தங்களுக்கும் செய்து தரும்படி கேட்டனர். இதன் மூலம் எனக்கு ஒரு சிறிய தொகை கிடைத்தது. அந்த சமயத்தில் அந்த சிறிய தொகை எனக்கு பெரிய உதவியாக இருந்தது. அதன் பிறகுதான் வீட்டில் இருந்தபடியே இதைத் தொழிலாகச் செய்ய ஆரம்பித்தேன். ஒருவர் மற்றவருக்குச் சொல்லியே நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. அவ்வப்போது புதுபுது டிசைன்களையும் மாற்றிக்கொண்டே இருந்தேன். இதுவும் எனக்குப் பெரிய உதவியாக இருந்தது.

தற்போது க்ரோஸாவினால் ஆன ஸ்வெட்டர், நகை, பர்ஸ், கைப்பை,டேபிள் மேட், விழாக்களுக்கான கிஃப்ட், சேலை பார்டர்ஸ், மோட்டிஃப், சார்ட் பேப்பர், குல்லிங் பேப்பர் போன்றவற்றில் வித்தியாசமான மொய் கவர்கள் தயாரிப்பது, எம்ப்ராய்டரி செய்த கிரீட்டிங் கார்ட் தயாரிப்பது, வண்ண வண்ண பாசி மணிகளைக் கொண்டு பூஜை அறையில் வைக்கும் கோலம் தயாரிப்பது, படி கோலம் தயாரிப்பது, ஐஸ்வர்ய கோலம் தயாரிப்பது, பிளாஸ்டிக் மேட் வைத்து வளையல் பவுச், கடிதப் பெட்டி, போட்டோ ஃபிரேம், பேனா ஸ்டாண்ட், பென்சில் பவுச், இது இல்லாமல் திருமண விழாக்களில் அலங்காரத்துக்காக வைக்கப்படும் கல்யாண செட், ஆரத்தி தட்டு செய்வது, கொலு பொம்மைகள் செய்வது என 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான பொருள்கள் தயாரித்து வருகிறேன்.

30 ஆண்டுகளாகக் கைவினைப் பொருள்கள் செய்து வருவதால் பொருள்களில் நல்ல நேர்த்தி இருப்பதாக நிறையப் பேர் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். 2015-ஆம் ஆண்டிற்கான "மகளிர் தின' விழாவையொட்டி என்னையும் அழைத்து "3 எட்ஜஸ்' என்னும் விருதையும் அளித்தார்கள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.