காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேச முடியாதவர்களை பேச வைப்போம்!

பேச முடியாதவர்களை பேச வைக்கும் மருத்துவம் MERS Institute of speech and hearing   நான்காம் ஆண்டு படித்து வருகிறார் மதுமிதா. இதில் என்ன சிறப்பு என்றால் கடந்த

News image
Updated On :17 ஜூன் 2015, 4:58 am

ஸ்ரீதேவி குமரேசன

பேச முடியாதவர்களை பேச வைக்கும் மருத்துவம் MERS Institute of speech and hearing   நான்காம் ஆண்டு படித்து வருகிறார் மதுமிதா. இதில் என்ன சிறப்பு என்றால் கடந்த மூன்று ஆண்டுகளில் வாய் பேச முடியாத 100 பேருக்கு மேல் ஸ்பீச் தெரபியின் மூலம் வாய் பேச வைத்திருக்கிறார் இவர்.

இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நான் ""Sôu MERS Institute of speech and hearing  கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ப்ளஸ் டூ முடித்தவுடன். மக்களுக்கு பயன்படும்படியான படிப்புதான் எடுக்க வேண்டும் என்ற முடிவுடன் பெற்றோர்களின் அனுமதியுடன் இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தேன். இந்த கல்லூரி சென்னை பாலவாக்கத்திலும் இதன் கிளினிக்கல் யூனிட் மந்தைவெளியிலும் இருக்கிறது.

 இந்த ஸ்பீச் தெரபியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஆடியோலஜி மற்றொன்று ஸ்பீச் லாங்வேஜ் பெத்தாலஜி. இதன் மூலம் என்ன செய்ய முடியும் என்றால் காதுகேளாத, வாய் பேச முடியாமல் இருப்பவர்களையும், திக்குவாய் உள்ளவர்கள், ஆட்டிஸம் பாதித்தவர்கள், மனநிலை பாதித்து அதனால் பேச முடியாமல் போனவர்கள், அன்னப்பிளவு ஏற்பட்டு பேசமுடியாதவர்கள், விழுங்குவதில் குறையுள்ளவர்கள் போன்றவர்களையும், இன்னும் வேறு சில பிரச்னைகளால் பாதித்து பேச முடியாதவர்களையும் ஸ்பீச் தெரபி மூலம் பயிற்சி அளித்து பேச வைக்கிறோம். இதில் தேவைபடுவோருக்கு இ.என்.டி மருத்துவர்கள் இம்பிளான்ட் அறுவைச்சிகிச்சை செய்த பின் நாங்கள் ஸ்பீச் தெரபிப் பயிற்சியளிக்கிறோம்.

இப்படிப்பட்டவர்களுக்காக அரசு “Cochlea implant’   என்ற ஸ்கீம் வைத்திருக்கிறது. அவர்களுடன் எங்கள் கல்லூரியும் இணைந்து இந்த பயிற்சியை அளித்து பேச முடியாதவர்களை பேச வைக்கிறோம். 

நமது இன்றைய மருத்துவ சூழலில் அட்வான்ஸ் டெக்னாலஜி நிறைய வந்துவிட்டது. அதைப் பயன்படுத்தி ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு காது கேட்கிறதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட முடியும். மேலும் 3 மாதங்களில் எதனால் அந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்பதையும் முழுமையாக அறிய முடியும். அதன் பிறகு ஓராண்டுக்குள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல வருவதற்கு இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக ஒரு குழந்தைக்கு மூளையின் வளர்ச்சி 5 வயதுவரை இருக்கும். அந்தப் பருவத்தில் நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோமோ அதனை அது உடனே கற்றுக்கொள்ளும். அதனால் தான் அந்தக் காலத்தில் ஒரு பழமொழி சொல்லி வைத்தார்கள். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்று. இந்த 5 வயதுக்குள்  காது கேளாத குழந்தைகளுக்கு சர்ஜரி செய்துவிட்டு பின்பு இந்த தெரபி கொடுத்தால் அவர்கள் நன்கு பேச வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு சார்பில் 6 வயதுக்குட்பட்ட  ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. மற்றபடி வயது வரம்பின்றி அனைவருக்குமே பயிற்சி தருகிறோம். குழந்தைகளாக இருந்தால் அவர்களின் அம்மாவுக்கும் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்று சில பயிற்சி முறைகளைச் சொல்லித் தருகிறோம். இப்படி வாய்பேச முடியாமல் வருபவர்களை ஸ்பீச் தெரபி மூலம் பேச வைக்கும் போது என்னாலேயும் மற்றவர்களுக்கு உதவ முடிகிறது என்று மிகவும் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் இருக்கிறது.  மேலும் பாடகர்கள், மிமிக்கிரி செய்பவர்களுக்கும்  அவர்கள் குரலை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் தெரபி கொடுக்கிறோம்.

எனது குடும்பம் இசை சார்ந்த குடும்பம் என்பதால் சிறு வயது முதலே முறைப்படி கர்நாடக சங்கீதத்தை உஷா பரத்வாஜ் என்பவரிடமும், ஹிந்துஸ்தானி இசையைப் பேராசிரியர் இராமமூர்த்தி என்பவரிடமும் முறைப்படி கற்றுள்ளேன். இது தவிர தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பள்ளியான கே.எம்.கன்ஸர்வேட்டரியில் ஹிந்துஸ்தானியில் Preparatory  கற்று வருகிறேன். இதுதவிர விரைவில் திரைக்குவர இருக்கும்  "பையன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு பின்னணியும் பாடியிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.