காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரோக்கியத்திற்கு ஆலோசனை!

""பொதுவாக மருத்துவர்களின் பணி என்பது தங்களை நாடி வரும் நோயாளிகளுக்குத் தகுந்தவாறு சிகிச்சை அளிப்பதுதானே?

News image
Updated On :6 செப்டம்பர் 2015, 8:58 am

ஸ்ரீதேவி குமரேசன

""பொதுவாக மருத்துவர்களின் பணி என்பது தங்களை நாடி வரும் நோயாளிகளுக்குத் தகுந்தவாறு சிகிச்சை அளிப்பதுதானே? ஆனால் ஒரு மருத்துவராக நான் என்ன நினைக்கிறேன் என்றால் மக்களுக்கு நோய் வருமுன் தற்காத்துக் கொள்வது எப்படி? என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே. மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே கடந்த சில ஆண்டுகளாகச் சிந்தித்து "ரேடியண்ட் வெல்நெஸ்' என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்'' என்கிறார் அதன் இயக்குநரும், மருத்துவருமான ரேணுகா டேவிட். இது குறித்து மேலும் அவர் கூறியது:

"" தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், அழகு குறித்தும் ஆண், பெண் இரு பாலருக்கும் எப்போதுமே ஒரு தனிக் கவனம் உண்டு. ஆனால் சமீபகாலமாக வயது வித்தியாசமின்றி சுகர், பி.பி. ஹைபர் டென்ஷன், உடல் பருமன், கேன்சர், சரும நோய்கள், பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை போன்ற பலவித நோய்களும் அதிகரித்து ஆரோக்கியமும் கெட்டு அழகும் குறைந்து வருகிறது. ஒருபுறம் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு தருவதாகச் சொல்லி பல போலி விளம்பரங்களும் வருகின்றன. இதனை நம்பி மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக நாங்கள் இணையத்தளத்தின் யூ டியூப் மூலம் அவரவரின் உடல் ரீதியான பிரச்னைகள் குறித்தும் அதற்கு உரிய மருத்துவர்களின் ஆலோசனைகளையும் நேரடியாக மக்களுக்கு வழங்கினோம். நம் பிரச்னைப் பற்றி இவர்கள் பேசுகிறார்களே என்ற நம்பிக்கையுடன் எங்களை நிறையப் பேர் அணுகினார்கள். அதில் இளைஞர்கள்தான் அதிகம்.

இன்றைய இளம்தலைமுறையினருக்கு அவரவருக்குத் தகுந்தபடி நிறைய பிரச்னையும் இருக்கிறது. இந்த பிரச்னைகள் குறித்து யாரிடம் பேசுவது, எப்படிப் பேசுவது என்ற தயக்கமும் கூடவே இருக்கிறது. பெற்றோரிடம் பேசவும் பயப்படுகிறார்கள். அது போன்று வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பிரச்னைகள் வேறு விதமாக இருக்கும். சிலர் எல்லாவற்றையும் கணவரிடம் கூட சொல்ல முடியாமல் தவிப்பார்கள். சில வீடுகளில் கணவனே பிரச்னைக்குரியவராகவும் இருக்கிறார். இதனாலேயே இன்று விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் உதவும் வகையில் அவர்களின் சந்தேகங்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுப்பதற்காகவே ரேடியண்ட் வெல்நெஸில் "யங் இந்தியா' என்ற சென்டரை நிறுவி உள்ளோம். இந்த "யங் இந்தியா' நிச்சயமாக அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பிரச்னைக்கும் முழுமையான தீர்வும் இருக்கும்.

அதாவது ஒருவருக்கு ஜுரம் வந்தால் அது எதனால் வந்தது, டெங்குவா, மலேரியாவா, வைரஸ் ஜுரமா என்று ஆராய்ந்து அதற்குத் தகுந்த மருத்துவம் செய்வோம். அதே முறையைத்தான் இங்கும் கையாளுகிறோம். ஒருவருக்கு உடல் பருமன் ஏற்பட்டுவிட்டால் அது எப்படி உருவானது என்பதை முழுமையாக ஆராய்ந்து அதன் பிறகு தீர்வு கொடுக்கிறோம். இப்படித்தான் ஒவ்வொரு பிரச்னையையும் அடி முதல் ஆராய்ந்து மீண்டும் வராதவாறு சிகிச்சை அளித்து வருகிறோம்.

இளைஞர்கள் கவனிக்க வேண்டியவை: நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு உணவருந்துங்கள், தண்ணீர் நிறையக் குடியுங்கள், இவை ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அது போன்று 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ கட்டாயம் ஹெல்த் செக்ப் செய்து கொள்ள வேண்டும். அதுவும் வீட்டில் பெற்றோர் யாராவது நோய்வாய்ப்பட்டவர்களாக இருந்தால் நிச்சயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதுபோன்று கிரீமோ, லோஷனோ எதுவாக இருந்தாலும் 20 வயதிற்கு மேல் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் என் தோழி இந்த கிரீமை உபயோகித்தாள் அதனால் நானும் உபயோகிக்கிறேன் என்று எதையும் முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால் ஒவ்வோர் உடலின் தன்மையும் வேறு வேறாக இருக்கும். இதனால் ஒருவருக்கு ஏற்றுக் கொண்டது, மற்றவருக்கு ஒவ்வாது. சில நேரங்களில் அவை உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதனால் அது சம்பந்தப்பட்ட தேர்ந்த நிபுணரின் ஆலோசனையில்லாமல் எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.