ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தெரிந்த பெயர்: தெரியாத விவரம்

புதுவை மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 நிலப்பகுதிகளைக் கொண்டதாகும். மொத்தமாக 492 ச.கி.மீ. பரப்பளவு உடையது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:04 pm

தங்க. சங்கரபாண்டியன்

புதுவை மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 நிலப்பகுதிகளைக் கொண்டதாகும். மொத்தமாக 492 ச.கி.மீ. பரப்பளவு உடையது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தமிழ்நாட்டை ஒட்டியும், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் முறையே கேரளம் மற்றும் ஆந்திர மாநிலத்தை ஒட்டியும் அமைந்துள்ளன. புதுச்சேரிப் பகுதி புதுவை மாநகரம் மற்றும் 9 சிறிய நிலப் பகுதிகளைக் கொண்டதாகும். இந்த 9 சிறிய பகுதிகளும் தமிழ்நாட்டில் திட்டுத் திட்டாக உள்ளன.

இம்மாநிலத்தின் தலைநகர் புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகின்றது. புதுச்சேரி என்பதுதான் பழைய பெயர். இப் பெயரை டர்ன்க்ண்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ் என்று பிரெஞ்சு மொழியில் எழுதினர். டர்ன்க்ண்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ் இல் உள்ள "ம’ என்னும் எழுத்தை "ய்’ என்று மாற்றிப் படித்தால் டர்ய்க்ண்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ் ஆனது.

சங்க காலத்தில் "ஒய்மாநாடு' என அழைக்கப்பட்டது. எயினர் இன மக்கள் இங்கு வாழ்ந்தனர். வீரை வெளியனார் மற்றும் வீரை வெளியன் தித்தனார் என்னும் சங்க காலப் புலவர்கள் புதுச்சேரிக்கு அடுத்துள்ள வீராம்பட்டினத்தில் வாழ்ந்துள்ளனர்.

பிரெஞ்சுக்காரர்கள் 1601-ஆம் ஆண்டு இந்தியாவில் மசூலிப்பட்டினத்தில் வணிகத்தைத் துவக்கினர். எனினும் 1673-ஆம் ஆண்டில்தான் நிலையான வணிக மையத்தை இந்தியாவில் ஏற்படுத்தினர்.

புதுச்சேரியில் ஷெரிகான்லோடி என்னும் செஞ்சி அரசனிடம் பெல்லான்ஜர் தெ லெஸ்பினே என்னும் பிரெஞ்சு வணிக இயக்குநர் மிகச் சிறிய புதுவைப் பகுதியை விலைக்கு வாங்கினார்.

நிலையான மற்றும் ஓரளவிற்கு வலுவான பிரெஞ்சு ஆட்சியை புதுச்சேரியில் ஏற்படுத்தியவர் ஜோசப் பிரான்சுவா துய்ப்ளே என்னும் பிரெஞ்சு கவர்னர்.

1675-இல் பிரான்சுவா மர்த்தேன் தற்போதைய பாரதி பூங்கா, மருத்துவமனை, சட்டப் பேரவை உள்ள இடங்கள் அடங்கிய பகுதியில் 
வணிக மையத்தை அமைத்தார். 

புதுச்சேரி மராட்டியர் வசமாயிற்று. நிதி நெருக்கடியால் மராட்டிய வாரிசு மன்னர் ராஜாராம் டச்சுக்காரரிடம் புதுச்சேரியை விற்றார். டச்சுக்காரர் பிரெஞ்சுக்காரரை வெளியேற்றினர். ரிஸ்விக் ஒப்பந்தப்படி 1699-இல் பிரெஞ்சுக்காரர்கள் மீண்டும் புதுச்சேரியைப் பெற்றனர்.

1703-இல் காலாப்பட்டு பகுதி, 1706-இல் ஒழுகரை மற்றும் பல ஊர்களை பிரெஞ்சுக்காரர்கள் வாங்கினர். புதுச்சேரியில் நேரான தெருக்கள் அமைக்கப்பட்டன. இவற்றைச் செய்தவர் பிரான்சுவா மர்த்தேன்.

இவருக்குப் பின் 1723-இல் ஏனாம் 1725-இல் மாஹே ஆகிய பகுதிகளைப் பிரெஞ்சு கவர்னர்கள் வாங்கினர். 1739-இல் காரைக்காலைப் பெற்றனர்.

நாட்குறிப்பு வேந்தரான ஆனந்தரங்கம் பிள்ளை, துய்ப்ளே காலத்தில் வாழ்ந்தார். துய்ப்ளேயின் வரலாற்றையும் பிரெஞ்சுக்காரர் மற்றும் ராபர்ட் கிளைவ் நடத்திய கர்நாடகப் போர்களையும் ஆனந்தரங்கம் பிள்ளை டைரியிலிருந்து அறியலாம்.

துய்ப்ளே ஆர்க்காட்டு நவாப்பான சந்தா சாகிப்பையும், ஹைதராபாத்தின் முசாபர்ஜங்கையும் தம் படை வலிமையால் அரசராக்கினார்.

ஆர்க்காட்டு நவாப்பையும் தோற்கடித்தனர். மேலும் ஆரணி, காவேரிபாக்கத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயப் படைகளிடம் தோற்றன. எனவே துய்ப்ளேயை திரும்ப அழைத்துக் கொண்டது பிரெஞ்சு அரசு.

துய்ப்ளே பிரான்ஸ் சென்ற பிறகு 1760-இல் புதுச்சேரி மற்றும் மாஹே பகுதிகள் ஆங்கிலேயர் வசமாயின. 

1763-இல் பிரெஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகளை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 

ஆறு ஆண்டுகளுக்குப்பின் அமைதி உடன்படிக்கையால் புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் வசமாயிற்று. 1814 மே 30-இல் வணிக நோக்க அடிப்படையில் பிரெஞ்சு ஆங்கிலேய அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.

உலகெங்கிலும் விடுதலை உணர்வு மலர்ந்ததின் விளைவாக 15.8.1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. இறுதியாக புதுச்சேரி அனைத்து நகராட்சி உறுப்பினர்களின் கருத்தறிதல் வாக்கெடுப்பு 18.10.1954-இல் புதுச்சேரி, சிவராந்தகம் கீமூரில் நடந்தது. 171 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 164 உறுப்பினர்கள் புதுச்சேரி விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியப் பிரதிநிதி கேவல்சிங்கும் பிரெஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தெயும் பிரெஞ்சியப் புதுச்சேரி பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

கேவல்சிங், புதுச்சேரி தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தியாவுடன் புதுச்சேரி நிலப்பகுதியை அதிகாரபூர்வமான சட்ட மாறுதலுடன் இணைக்க 1958 மே 28-ஆம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 1962-ஆம் ஆண்டு ஜூலை முதல் நடைமுறைக்கு வந்தது.

பிரெஞ்சுக் குடிமக்களாக இருக்கவோ அல்லது இந்தியக் குடிமக்களாக தம்மை மாற்றிக் கொள்ளவோ உள்ள உரிமையை 1962 வரை புதுச்சேரி மக்களுக்கு 1956-இல் ஏற்பட்ட உடன்படிக்கை வகை செய்தது. பின்னர் இந்திய அரசியல் சட்ட 14-ஆவது திருத்தத்தின் அடிப்படையில் 1962-இல் இந்தியாவுடன் முழுமையாக புதுச்சேரி மாநிலம் இணைக்கப்பட்டது. இந்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் புதுவை விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.