ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தெரிந்த பெயர்... தெரியாத விவரம்...: ஒகேனக்கல்

காவிரியாற்றிலுள்ள ஒரேயொரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி} ஒகேனக்கல். "ஒகே' என்றால் கன்னடத்தில் புகை என்றும் "கல்' என்றால் பாறை என்றும்

News image
Updated On :9 அக்டோபர் 2017, 7:20 am


* காவிரியாற்றிலுள்ள ஒரேயொரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி} ஒகேனக்கல். "ஒகே' என்றால் கன்னடத்தில் புகை என்றும் "கல்' என்றால் பாறை என்றும் பொருள். அதாவது பாறைகளுக்கு நடுவே புகைபோல கொட்டும் அருவி என்றும் பொருள்.

* பள்ளத்தாக்கில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீருக்கு மத்தியில், பரிசல் பயணம் மேற்கொள்வது அலாதியானது. ஏறத்தாழ 400 பரிசல்கள் இங்கு
உள்ளன.

* வனத்துறை மற்றும் அரசுத் துறைகளின் தங்கும் விடுதிகளும், தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன.

* தருமபுரியிலிருந்து 46 கி.மீ. தொலைவும், பெங்களூருவில் இருந்து 180 கி.மீ. தொலைவும் கொண்டது ஒகேனக்கல். விடுமுறைக் காலங்களில் தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தவிர, தென் மாநில சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

* கார்போனைட் பாறைகளில் தழுவி வரும் தண்ணீர் அருவியில் குளிப்போருக்கு கார்போனைட் தாதுவைத் தருகிறது.

* எண்ணெய் மசாஜ் எடுத்துவிட்டு அருவியில் குளிப்பது ஒகேனக்கல்லின் மற்றொரு தனிச்சிறப்பு. அரசு சார்பில் மசாஜ் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உரிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

* கட்லா, ரோகு, கெண்டை, கெளுத்தி, வாலை, ஜிலேபி போன்ற மீன்கள் இங்கு அதிகமாகக் கிடைப்பதால் ஒகேனக்கல் மீன் விருந்து மிகவும் பிரசித்தி பெற்றது. சமையல் பணியாளர்களிடம் சந்தையில் மீன் வாங்கிக் கொடுத்துவிட்டு அருவியில் குளித்து விட்டு வருவதற்குள் சுடச்சுட உணவு தயாராக இருக்கும்.

* ஒகேனக்கல்லுக்கு மேலே ஊட்டமலை என்றொரு கிராமம் உள்ளது. மேட்டூர் அணை கட்டும்போது, அங்கு வசித்த மக்கள் இப்பகுதிக்கு இடம் மாற்றப்பட்டனர்.  ஊட்டமலையிலுள்ள சுமார் 300 குடும்பங்கள், ஒகேனக்கல்லில் மீன்பிடித்தல், பரிசல் ஓட்டுதல், சமையல் செய்து தருதல், மசாஜ் செய்தல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

* ஊட்டமலை செல்லும் வழியில் வனத்துறையின் முதலைப் பண்ணை உள்ளது. 1975-இல் அருகி காணப்பட்ட முதலை இனங்களைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் 16 முதலைகள் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் இப்பண்ணை. 115 முதலைகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.

* மேட்டூர் நீர்த்தேக்கம் நிறைந்தால், ஒகேனக்கல் வரையிலும் தண்ணீர் ஓட்டம் காணப்படும் என்ற அளவுக்கு 60 சதுர கி.மீ. சுற்றளவுள்ள நீர்த்தேக்கப் பகுதியைக் கொண்டது மேட்டூர்.

* ஒகேனக்கல்லுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள "பிலிகுண்டுலு' என்ற இடத்தில் மத்திய நீர் ஆணையத்தின் சார்பில் தினமும் தண்ணீர் வரத்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

* பேவனூர் சோதனைச் சாவடி முதல் ஒகேனக்கல் வரையிலும் வனச்சாலை என்பதால், சில நேரங்களில் யானைகள் நடமாட்டத்தையும் காண முடியும்.
மீன்வளத்துறை சார்பில் அரிய மீன்களின் கண்காட்சியாக மீன் பண்ணையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.


படம்: யுகே. ரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.