சென்னை தரமணியில் உள்ள மத்திய அணுசக்தி துறை அலுவலகத்தில் பதிவாளராக பணிபுரிபவர் எஸ்.விஷ்ணு பிரசாத். 55 வயதான இவர் திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை நடைப்பயிற்சிக்குச் செல்வது வழக்கம்.
தினமும் நடைப்பயிற்சியின்போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அவர் விசில் அடிக்கிறார். உடனே, அவரைச் சுற்றி ஏராளமான காகங்கள் கூடிவிடுகின்றன. அவர், அந்த காகங்களுக்கு காராபூந்தி, பிஸ்கெட் போன்றவற்றை வழங்குகிறார். இது தினந்தோறும் நடைபெறும் நிகழ்வாகவே மாறிவிட்டது.
இதுபற்றி, விஷ்ணு பிரசாத் கூறுகையில்:
""சண்முகம் என்ற முதியவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே காகங்களுக்கு உணவு அளித்து வந்தார். அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஒரு நாள், காகங்களுக்கு உணவு வழங்கும் நேரத்தில் அந்த முதியவர் வரவில்லை. தேடிப்பார்த்தபோது, அருகே இருந்த பூங்காவில் கவலையுடன் உட்கார்ந்திருந்தார். என்னவென்று கேட்டபோது, தன்னால் நடக்க முடியவில்லை என்று சொன்னார்.
அவர் வர இயலாத இரண்டு நாட்களுக்கு நானே காகங்களுக்கு உணவு அளித்தேன். அதற்குப் பிறகு அந்த பெரியவரைப் பார்க்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று பின்னால்தான் தெரிந்தது. அவர் விட்டுச்சென்றதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். என் விசில் சத்தம் கேட்டதும் காக்கைகள் எங்கிருந்தாலும் வந்துவிடுகின்றன'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


