மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வெண்டைக்காயால் ஆஸ்துமா குறையும்! 

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கீழ்க்கண்ட நன்மைகளை பெறலா

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 5:08 am

DIN

இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கீழ்க்கண்ட நன்மைகளை பெறலாம்.
 வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.
 சுவாச பிரச்னைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது. வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
 வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
 வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.
 - பி. கவிதா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.