360 டிகிரி

பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். சூன்யமோ, விஷக்கடியோ நெருங்காது. நஞ்சை முறிக்கக்கூடிய தன்மை இதற்குண்டு. 
Updated on
1 min read

பேரீச்சம்பழம்
* பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். சூன்யமோ, விஷக்கடியோ நெருங்காது. நஞ்சை முறிக்கக்கூடிய தன்மை இதற்குண்டு. புதிய பழங்களுடன் காய்ந்த பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்பழத்தை சிறிய தந்தை என்று வர்ணித்தார் நபிகள் நாயகம். 
- சு.இலக்குமணசுவாமி

* ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ, பேசத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஓவியம் வரையத் தொடங்கிவிட்டார்.
- மு.பெரியசாமி 

* பாப்கார்ன் முதன்முதலில் அமெரிக்கர்களின் பொங்கல் திருநாளான "தேங்ஸ் கிவிங் டே' விருந்தில் 1630-ஆம் ஆண்டி பிப்ரவரி 22-ஆம் தேதி செவ்வியந்தியர்களால் வழங்கப்பட்டது.

* 1930-இல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் விளையாடிய கிரிக்கெட் டெஸ்டின் போதுதான் முதன்முதலாக வர்ணனை ரேடியோவில் தொடங்கப்பட்டது.

* கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலில் 1880-ஆம் ஆண்டு முதன்முதலாக தங்கம் எடுக்கத் தொடங்கினர்.

* மிகப்பெரிய வயலின் இசைக்கருவி 6 அடி 8 அங்குலம் நீளமுடையது. மிகச்சிறிய வயலின் 3 அங்குலம் நீளமுடையது. இந்த இரண்டும் கிழக்கு ஜெர்மனியில் உள்ள மார்க்னிகிர்சன் மியூசியத்தில் உள்ளது. 

* மிகப்பெரிய வைர வியாபார ஸ்தலம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு கலஹாரி பாலைவனத்தில் உள்ள கிம்பர்லியில் உள்ளது.
- தங்க.சங்கரபாண்டியன்

ராகங்கள் பல வகை
* "பூபாள' ராகத்தின் உண்மையான பெயர் - புள்ளாளம்.

* "ஹம்சத்வனி ராகம், அன்னப்பறவையின் குரலில் இருந்து உருவாக்கப்பட்டது.

* பக்தி பரவசமூட்டும் ராகம் "ஆபோகி'

* "காபி' ராகத்தில் நவரசங்களையும் எளிதாகப் பாடலாம்.

* சோகத்தைக் குறிக்கும் ராகம் "முராரி'.

* கம்பீரத்தைத் வெளிப்படுத்தும் ராகம்- "தர்பார்'.
- த.சி.பாலு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com