“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பட விழாக்களில் ஆதரவு

ரசிகர்களின் ஆதரவை நிச்சயம் பெறும் படம் என்று தெரிந்தால், அது முதலில் உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பபடுவது வழக்கமாகி வருகிறது

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 6:18 am

ரசிகர்களின் ஆதரவை நிச்சயம் பெறும் படம் என்று தெரிந்தால், அது முதலில் உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பபடுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் வெளியான "மேற்கு தொடர்ச்சிமலை' படம், உலகின் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்று விருதுகளை தட்டி வந்தது. அதன் பின்னரே, அதன் வெளிச்சத்தை இங்கே பயன்படுத்தி படம் வெளியானது. அந்த பாணியில் அடுத்து வருகிற படம் "மனுசங்கடா' . மனித உரிமைகளை பற்றி பேசியுள்ள இப்படம், மத்திய அரசால் கோவாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் உலகத் திரைப்பட விழாவில், திரையிடப்பட்டது. அது போன்று கெய்ரோ உலகத் திரைப்பட விழாவிலும் இது திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட இரு இடங்களிலும் ரசிகர்கள் பெரும் ஆதரவை தந்துள்ளனர். ஏ.கே.பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அம்ஷன் குமார் இயக்கியுள்ளார். ராஜீவ் ஆனந்த், சசிகுமார், மணிமேகலை, ஷீலா, விதுர், ஆனந்த் சம்பத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.