கரோனா வைரஸ்... பெயரை உருவாக்கியவர்
50-ஆம் நூற்றாண்டில் கவுல்ஸ் என்ற சிறு கிராமத்தை கைப்பற்றிய ரோமானியர்களான ஒபிலிக்ஸ் மற்றும் கெட்டா பிக்ஸ் ஆகியோரை எதிர்த்து போராடும் வீரரான ஆஸ்ட்ரிக்ஸ் என்பவனை பற்றிய சித்திர தொடர் ஒன்றை,


50-ஆம் நூற்றாண்டில் கவுல்ஸ் என்ற சிறு கிராமத்தை கைப்பற்றிய ரோமானியர்களான ஒபிலிக்ஸ் மற்றும் கெட்டா பிக்ஸ் ஆகியோரை எதிர்த்து போராடும் வீரரான ஆஸ்ட்ரிக்ஸ் என்பவனை பற்றிய சித்திர தொடர் ஒன்றை, அண்மையில் 92-ஆவது வயதில் காலமான ஆல்பர்ட் உடர்úஸா என்பவர் உலக அளவில் பல ஆங்கில பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.
இந்தியா உட்பட பல மேல்நாட்டு பத்திரிகைகளில் வெளியான இத்தொடருக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது.
இத்தொடருக்கான கதை ஆலோசகராக இந்த ரெனி கோஸ்கினி என்பவரும் 1977-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இருப்பினும் ஆன்தியாபெல் மற்றும் டொக் ஹாக்ரிட்ஜ் ஆகியோரின் உதவியோடு ஆஸ்ட்ரிக்ஸ் தொடர் தொடர்ந்து வெளியாயிற்று.
இப்போது உடர்úஸாவும் இறந்துவிட்டதால் ஆஸ்ட்ரிக் தொடர்ந்து வெளியாவது கேள்விக்குறியாக உள்ளது.
பல வாசகர்கள் தங்களது வருத்தத்தை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வரும் வேளையில் 2017-ஆம் ஆண்டு வெளியான ஆஸ்ட்ரிக் தொடரில் முகமூடி அணிந்து ஆக்கிரமிப்பாளர்களுடன் நடத்திய ரத போட்டியில் வெற்றிப்பெற்ற ஆஸ்ட்ரிக்ஸ் அவர்களை கரோனா வைரஸ் என்று உடர்úஸா குறிப்பிட்டிருந்ததையும் நினைவு படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...