தினமணியும் நானும்: 1934-2019
நான் ஓய்வுப் பெற்ற மத்திய அரசு அதிகாரி. தஞ்சாவூரில் நான் 6-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தையார் தனது சொந்த வீட்டிலிருந்து வேறு வீடு மாற நேர்ந்தது.


நான் ஓய்வுப் பெற்ற மத்திய அரசு அதிகாரி. தஞ்சாவூரில் நான் 6-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தையார் தனது சொந்த வீட்டிலிருந்து வேறு வீடு மாற நேர்ந்தது. அந்த வீட்டிற்கு எதிரே தஞ்சாவூர் நகராட்சி நூலகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது நான் தினமணி வாசிக்க ஆரம்பித்தேன். இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
நான் ஒரு புத்தகப்பிரியன். கல்லூரிப் படிப்பின் போது மதிய இடைவேளையில் நூலகத்துக்குச் சென்றால் எனது கண்கள் முதலில் தேடுவது அன்றைய தினமணியைத்தான்.
சென்னையில் வேலையில் சேர்ந்த பிறகு தினமும் மதிய வேளையில் எல்லாப் பக்கங்களையும் விடாமல் படிக்கும் பத்திரிகை தினமணியாகத்தான் இருக்கும். எங்கேனும் வெளியூருக்குச் செல்ல நேர்ந்தாலும் காலையில் கடைக்குச் சென்று தினமணி வாங்கிப் படிக்காவிட்டால் எனக்கு அன்றைய தினம் ஏதோ குறையொன்று ஏற்பட்டது போலவே உணர்வேன்.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகத் தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளை ஆண்டு சந்தா கட்டி தினமும் தினமணியை வாசிக்கிறேன். தினமணி வாசகன் என்பதில் எனக்குப் பெருமை. தினமணி வெளியிடும் ஆண்டு மருத்துவ மலர்களை முதல் இதழிலிருந்து வாங்கித் தொடர்ந்துப் படித்துப் பாதுகாத்து பயனடைந்து வருகிறேன்.
-ராஜேந்திரன்

தினமணிக்கும் எனக்குமான உறவு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கியதில் இருந்து எனக்கு அறிமுகமானது தினமணி தான். என்னுடைய தந்தை குப்புசாமி அன்றைய சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் படித்து சுவைத்து எனக்கு அறிமுகப்படுத்திய பத்திரிகை. தினமணியைக் கொடுத்து என்னைப் பிழையின்றிப் படிக்கச் சொல்வார். உச்சரிப்புச் சரியாக வரும் வரை படிக்கச் சொல்வார்.
தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்பித்த பெருமை தினமணிக்கு உண்டு., தினமணியோடு இணைப்பாக வரும் புத்தகத்தை ஒரு வரி விடாமல் படிப்பேன். என்னுடைய கருத்தை தவறாமல் எழுதி அனுப்புவேன். முன்பு அவரவர் வாழ்வில் நடைபெற்ற சில உருக்கமான சம்பவங்களை எழுதச் சொல்லி தினமணி கதிர் அறிவித்தது. நான் எழுதிய கட்டுரை கை கொடுத்த தெய்வம் என்ற தலைப்பில் பிரசுரமானது. என்னை ஓர் அறிமுக எழுத்தாளராகவும், இளம் கவிஞராகவும் உருவாக்கியது தினமணி.
-கோப்பெருந்தேவி, சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...