/

யோகி பாபுவுக்கு முதல்வர் பாராட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு நடித்த கரோனா விழிப்புணர்வு விளம்பரம் அரசு சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு நடித்த கரோனா விழிப்புணர்வு விளம்பரம் அரசு சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை பார்த்த முதல்வர் வெகு நாட்களுக்குப் பிறகு மனம்விட்டு சிரித்து யோகிபாபுவை பாராட்டி இருக்கிறார்.

யோகிபாபுவுடன் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம் பற்றி இதன் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது... ""சீரியசான விஷயத்தை நகைச்சுவையாகக் காட்சிபடுத்துவது கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் அதைத்தான் கரோனா விளம்பரத்தில் அடிக்கடி நான் செய்து வருகிறேன். இப்போது யோகிபாபுவை வைத்து இந்தப் படத்தை எடுத்தேன்.மக்களிடம் பாராட்டும் பெற்றேன்.  நான் இயக்கிய 10-க்கும் மேற்பட்ட அரசு கரோனா விளம்பரங்களில் இது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே வரும்படி உருவாக்க வேண்டிய விளம்பரம் இது.

யோகிபாபுவிடம் இருந்து வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் விழுந்துகொண்டே இருக்கிறது. அவர் கூறும் அத்தனை வார்த்தைகளும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டே இருக்கிறது. எதை தவிர்ப்பது எதை வைத்துக்கொள்வது என்று முடுவெடுக்க முடியாத சூழல்.இன்னொரு பக்கம் நடிகர் மனோபாலாவின் நகைச்சுவை வந்து விழுந்துகொண்டே இருக்கிறது. அதெல்லாம் வைத்து முழு சினிமாவுக்கு வசனம் தயாரித்து விடலாம். நிறைய விஷயங்களை  1 நிமிடத்திற்குள் வருமாறு எடிட் செய்யப்பட்டதைப்  பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார் யோகிபாபு.

இந்த விளம்பரப்படம் வெளியிடப்பட்டபிறகு எங்கள் படக்குழுவினர் மீது இவருக்கு இருந்த மரியாதை மேலும் அதிகமானது. எனது திரைப்படத்தில் யோகிபாபு நடிப்பதற்கான முகாந்திரமாகவும் இந்த  நிகழ்வு அமைந்தது'' என்றார் இ.வி.கணேஷ்பாபு .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.