ரெஜினாவின் காதல் கதை

"வேதாளம், " மாயா', "பாகுபலி', " சென்னை 28 - 2' -ஆம் பாகம், "இது நம்ம ஆளு', "காஞ்சனா', "சிவலிங்கா'  உள்ளிட்ட   படங்களை விநியோகம் செய்த ரமேஷ் பி. பிள்ளை, சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலி
ரெஜினாவின் காதல் கதை
Updated on
1 min read


"வேதாளம், " மாயா', "பாகுபலி', " சென்னை 28 - 2' -ஆம் பாகம், "இது நம்ம ஆளு', "காஞ்சனா', "சிவலிங்கா'  உள்ளிட்ட   படங்களை விநியோகம் செய்த ரமேஷ் பி. பிள்ளை, சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக சசி  இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி கண்டார்.  

தற்போது எழில் இயக்கத்தில் ஜீ வி பிரகாஷ்  நடிப்பில் "ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும்  ஜீத்து ஜோசப் இயக்கத்தில்  மோகன்லால்,  த்ரிஷா நடிப்பில் ஒரு மும்மொழிப் படமாக "ராம்'  ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.  இதைத் தொடர்ந்து ரெஜினா கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கவுள்ளார்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி  டான் சேண்டி இப்படத்தை இயக்குகிறார்.  

இவர் இதற்கு முன் "மகாபலிபுரம்', "கொரில்லா' படங்களை இயக்கியவர். காதல் கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் உணர்வுகளின் உயிர்ப்போடு,  தான் சந்தித்து பாதித்த  உணர்வுகளை இந்தப் படத்தின் மூலம் காட்சிப்படுத்தவுள்ளதாக  இயக்குநர் டான் சேண்டி தெரிவித்துள்ளார்.   இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ் ,ஆர்யன், அக்ஷன்த் உள்ளிட்டோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.

சென்னையில் கடந்த வாரம் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.  யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சாம் பாடல் மற்றும் பின்னணி இசையமைக்கிறார். கலை இயக்குநராக மூர்த்தி பணியாற்றுகிறார். படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் பணியாற்றவுள்ளார்.  அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்கிறது படக்குழு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com