காந்தியின் குரு

ஒரு சமயம் காந்தியின் செருப்பு பழுதாகிவிட்டது. மனுபென், காந்திக்கு தெரியாமல் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொண்டு போய் கொடுத்து சரி செய்யும் படி கூறினார்.
காந்தியின் குரு
Updated on
1 min read


ஒரு சமயம் காந்தியின் செருப்பு பழுதாகிவிட்டது. மனுபென், காந்திக்கு தெரியாமல் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் கொண்டு போய் கொடுத்து சரி செய்யும் படி கூறினார்.

காந்தி செருப்பைக் காணோம் என்று தேட, மனுபென் உண்மையை சொல்லிவிட்டார்.

"கூலிக்காக தைத்து தருவதாக சொன்னானா அல்லது காந்தியின் செருப்பாயிற்றே என்று சும்மா தைத்து தருவதாக சொன்னானா' என்று காந்தி கேட்க, 

"கூலி எட்டணா என்றான். மேலும் தங்களது செருப்பு என்று அவனுக்குத் தெரியாது' என்றதும்

"எட்டணாவை யார் தருவது? நீயும் நானும் ஒன்றும் சம்பாதிக்கவில்லையே.' மனுபென் செருப்பு தைப்பவனிடம் சென்று செருப்பை திரும்பக் கேட்க ""இன்று காலையில் எனக்கு கிடைத்த முதல் வேலை. எனவே அப்படியே திருப்பித்தர முடியாது'' என்றான்.

"அது காந்தியின் செருப்பு கொடுத்துவிடு'

"அப்படியா நான் ரொம்ப அதிர்ஷ்டம் செய்தவன். சும்மாவே வேலை செய்து தருகிறேன்.

"மனுபென்னுக்கு சங்கடமாகி செருப்பு தைப்பவனை காந்தியிடம் அழைத்துச் சென்றார்.

"என்னுடைய செருப்பு தைப்பதை பாக்கியமாக கருதுகிறாயா நல்லது. என்னை உன் சீடனாக ஏற்றுக்கொண்டு செருப்பு தைக்கும் கலையை கற்றுக்கொடு' என்றார். 

சம்மதிக்கவே, காந்தி அமர்ந்திருந்த இருக்கையில் அவனை அமரச் செய்து அவன் எதிரே காந்தி உட்கார்ந்தபடி அவன் தைப்பதை கூர்மையாக பார்க்கத் தொடங்கினார்.

(100 மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நூலில் இருந்து) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com