"ஒன்றாக இணைந்து நமது சமூகத்திற்கு உதவுவோம். நம்முன் நிற்கும் சவாலை எதிர்கொள்வோம்' என்றும் அனைத்து தரப்பினருக்கு தன்னம்பிக்கையூட்டி இருக்கிறார் சுந்தர்பிச்சை. தற்போது சுந்தர் பிச்சை தனது ஆல்பாபெட் நிறுவனத்தின் மூலம் 800 மில்லியன் டாலரை சுகாதார அமைப்புகள், சிறு வணிகங்கள் மற்றும் கொவைட்-19 வைரûஸ ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதி உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதி வரையிலும் வீட்டிலிருந்து பணிபுரியலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தச் சூழலில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இது குறித்து மனம் திறந்துள்ளார்:
""எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தினோம்.
கரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பிருந்த இயல்பு வாழ்கைக்கு நம்மால் மீண்டும் செல்லமுடியாது என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் போல் கூகுள் தன் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும் படி கூறியுள்ளோம்.
கூகுள் நிறுவனத்தின் புதிய கட்டுமானப் பணிகள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு அலுவலக பணிகளை பொருத்தவரை ஊழியர்கள் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்து பேசி ஒன்றிணைவது மிக அவசியம். அப்போது தான் வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும். நாங்கள் வருங்காலத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுத்துள்ளோம். சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த திட்டங்கள் இச்சூழலால் பாதிக்கப்படாது என்றும், அவை உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை. தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கிறார் சுந்தர் பிச்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


