வெளியே தலைகாட்டக் கூடாது!
கரோனா வைரஸ் பாதிப்பினால் உலகமே கலங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் மட்டுமே பாதிப்பு என்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலை மாறி, கரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது


கரோனா வைரஸ் பாதிப்பினால் உலகமே கலங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் மட்டுமே பாதிப்பு என்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலை மாறி, கரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? என்ற நிலை உருவாகி இருக்கிறது.
"வீட்டோடு இருங்கள்; கூட்டம் சேராதீர்கள்; தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று அரசு நம்மைக் கேட்டுக் கொண்டது. முதலில் மார்ச் 31- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தற்போது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் நிலைமை எப்படி? அங்கும் மார்ச் 31 - ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உண்மையில் அங்கே ஊர் "அடங்கி' உள்ளதா? கலிபோர்னியா மாகாணம் சான் ஜோசே என்ற நகரில் தொழில்நுட்ப தொழில்முனைவோராக இருப்பவர் துரை வேங்கடேஷ் பாலுசாமி. நம் தமிழ் நாட்டுக்காரர்.
அவரிடம், "அமெரிக்காவில் என்ன நடக்கிறது?' என்று கேட்டோம்.
அவர் கூறியதிலிருந்து:
""அமெரிக்காவின் மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளது. ஒவ்வொரு மாகாணமும் அந்தந்த மாகாணத்தில் ஏற்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நியூயார்க் மாகாணத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. யாரும் வீட்டு வாசலைத் தாண்டி கால்களை வெளியே வைக்கக் கூடாது. வீட்டுக்கு வெளியே தலையைக் காட்டக்கூடாது. அங்கே முழுமையான கர்ஸ்ரீந்க்ர்ஜ்ய் உள்ளது.
ஆனால், நாங்கள் இருக்கும் கலிபோர்னியாவில் மிக மிக அவசியமான தேவைகளுக்காக வெளியே சென்று வரலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க, மருத்துவமனைக்குச் சென்று வரலாம். நண்பர்களைப் பார்க்க, கடற்கரை, பூங்கா, ஹோட்டல் என ஊர் சுற்றக் கிளம்பினால் காவல்துறையினர் அபராதம் விதித்துவிடுவார்கள்.
கடைகளுக்குச் செல்பவர்கள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாம். ஆனால் வெளியே தலையைக் காட்டக் கூடாது. நடக்கக்கூடாது.
கடைகளுக்குச் செல்பவர்கள் அதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாகவே இ மெயில் மூலம் என்ன என்ன பொருள்கள் தேவை என ஆர்டர் செய்துவிட வேண்டும். பணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்திவிட வேண்டும். அதற்குப் பிறகு காரை எடுத்துக் கொண்டு சென்று கடைக்கு வெளியே நிறுத்தினால், முற்றிலும் தன் உருவத்தை முகமூடியாலும், கை உறைகளினாலும் கவச உடைகளாலும் மறைத்துக் கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் கடையின் உள்ளிருந்து வெளியே வந்து காரின் ஜன்னல் வழியே பொருள்களைத் தருவார்.
இதே போன்று ஏதேனும் உடல்நலப் பாதிப்பு காரணமாக டாக்டரைப் பார்க்க விரும்பினால், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக டாக்டரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். அவர் சில மருந்துகளைப் பரிந்துரைத்து அவற்றை நாம் வழக்கமாக வாங்கும் மருந்துக் கடைக்குத் தெரிவிப்பார். காரை எடுத்துக் கொண்டு சென்று கடையில் பொருள்களை வாங்குவதைப் போல காருக்குள் இருந்து கொண்டே மருந்துகளை வாங்க வேண்டும்.
மருத்துவர் நேரடியாகப் பரிசோதிக்க விரும்பினால், மருத்துவமனைக்கு வெளியே காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்க வேண்டும். காருக்குள் இருக்கும்போதே மருத்துவர் வந்து பரிசோதிப்பார். தேவையிருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிப்பார். மிக மிக அவசியமான தேவைகளுக்கு நாங்கள் வெளியே சென்று வருவது இப்படித்தான்.
கலிபோர்னியாவில் எந்த அலுவலகமும் நேரடியாக இயங்கவில்லை. தகவல் தொழில்நுட்பத்துறையைப் பொருத்தமட்டில் "வீட்டிலிருந்து வேலை' செய்வது புதிதல்ல. பொதுவான இணையதள இணைப்பு, வேலை செய்யும் நிறுவனத்தின் தனிப்பட்ட இணைய இணைப்பு இருப்பதால் வீட்டில் இருந்தே வேலை செய்கிறோம்.
நேரடியாக செய்யக் கூடிய வேலையைச் செய்கிறவர்களுக்கு - கடைகளில் - அழகு சாதன நிலையங்களில் வேலை செய்பவர்கள்- துப்புரவுப் பணி செய்பவர்கள் போன்றவர்களுக்கு வேலையில்லை. அவர்கள் வீட்டில் சும்மாதான் இருக்க வேண்டும்.
இப்படி பெரிய நிறுவனங்களில் வேலை செய்யாமல் மணிக்கூலிக்கு (ஏர்ன்ழ்ப்ஹ் ஜ்ர்ழ்ந்ங்ழ்) வேலை செய்வர்களுக்கு கலிபோர்னியா மாகாண அரசு, ஒவ்வொரு மாதமும் சம்பளம் தருவதைப் போல, நேரடியாக அவர்களுக்குப் பணம் தர முன் வந்திருக்கிறது. அதன்படி பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1000 டாலரும், குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 500 டாலரும் தருகிறது. இதை நேரடியாகப் பணமாகத் தருவார்கள்.
உடல் நலம் இல்லாமல் வீட்டில் இருந்தே மருத்துவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஏற்கெனவே அரசு வழங்கி வந்த உதவியை 90 நாள்
களுக்கு அதிகப்படுத்தி இருக்கிறார்கள். "கரோனோ வைரஸ் ரிலீஃப் பேக்கேஜ்' என 500 மில்லியன் டாலர் இப்படிப்பட்ட உதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. கருத்தரித்த பெண்கள், குழந்தைகள் நலனுக்கென்று 250 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியே வர முடியாத - வீட்டில் தனியாக உள்ள- முதியவர்களுக்கு நேரடியாக வீட்டுக்கே சென்று உணவு தரும் ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள் தரமானவை. 80 சதவீத மாணவர்களுக்கு மேல் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். அதில் ஏழை மாணவர்களும் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை, மதிய உணவு அவர்கள் படிக்கும் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவினால் மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், பெற்றோர் "காரை' எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று இலவச உணவை வாங்கி வருகிறார்கள். அமெரிக்காவில் கார் என்பது நம் ஊரில் வீட்டில் சைக்கிள் இருப்பதைப் போல.
பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தாலும், வீட்டிலேயே வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள்.
லேப் டாப், ஐ பேட் இல்லாத மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளியிலேயே அவற்றைத் தருகிறார்கள். ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களுக்கு வருமானமில்லை. எனவே வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை வாடகை தரவில்லை என்ற காரணத்திற்காக வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் சொல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டிருக்கிறது.
வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியிருப்பவர்களின் வீடுகளை கடனை அடைக்கவில்லை என்பதற்காக ஜப்தி செய்யக் கூடாது. மின்கட்டணம் செலுத்த
வில்லை என்பதற்காக மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது. கரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும் வரை இப்படிச் "செய்யக் கூடாததுகளை' அரசு நிறையச் சொல்லியிருக்கிறது.
இணைய தள சேவை முற்றிலும் இலவசமாக்கப்பட்டிருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தின் எல்லாப் பகுதிகளையும் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டிருக்கின்றன. ரயில்நிலையங்கள், மருத்து
வமனைகளில் எல்லாம் தூய்மையாக்கும் பணி தொடர்ந்து நடந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. கரோனா வைரஸ் நம் இயல்பான வாழ்க்கையை மாற்றிப் போட்டிருக்கிறது. அதன் பாதிப்பில் இருந்து தப்ப, உலகில் எங்கே நாம் இருந்தால் என்ன... இப்படி வீட்டுச் சிறைகளில் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்... வேறு வழியில்லை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...