தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பூலோக சொர்க்கம்

உலகிலேயே மிக ஈரமான, அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக பிரசித்தி பெற்றிருந்த மாவ்சின்ராம் கிராமம் மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 1:52 pm

விஷ்ணு


உலகிலேயே மிக ஈரமான, அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக பிரசித்தி பெற்றிருந்த மாவ்சின்ராம் கிராமம் மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த மாவ்சின்ராம் கிராமம் ஒரு பூலோக சொர்க்கம்.

இவை தவிர "மாவ்ஜிம்-புயின் குகை' எனப்படும் ஒரு குகை அமைப்பு ஒன்றும் இங்குள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றிருக்கிறது. ஸ்டாலக்மைட் படிவங்களால் ஆன இந்த குகையின் உள்ளே கனிமத்திரவங்கள் கூரையிலிருந்து சொட்டிய நிலையில் இறுகி காட்சியளிக்கின்றன. வட்டக்கூரை போன்ற அமைப்பினை கொண்ட "சிம்பர் ராக்' எனும் பாறை அமைப்பையும் இந்த குகையில் பார்க்கலாம். இவை தவிர மாவ்சின்ராம் கிராமத்திற்கு அருகே பார்க்க வேண்டிய இதர சுற்றுலா அம்சங்களும் நிறைய உள்ளன. தேரங் கிரேங் வியூபாயிண்ட், ஜதேரம் வெந்நீர் ஊற்று மற்றும் ரிட்மாவ்க்சிர் வியூபாயிண்ட் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஒரே நாளில் மேகாலயா சுற்றுலாப்பேருந்துகள் அல்லது தனியார் வாடகை வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்த ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து மகிழலாம். 

மாவ்சின்ராம் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 11,871 மி.மீ. அளவு மழை பொழிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.