தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மனிதனின் சிறந்த நண்பர்

பொதுவாக நாய் மனிதனைக் காட்டிலும் 10,000 மடங்கு நுகர்வதில் வல்லமை பெற்றது. அதனால்தான் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை வாசத்தை வைத்தே நாய் கண்டுபிடித்துவிடுகிறது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 1:57 pm

விஷ்ணு


பொதுவாக நாய் மனிதனைக் காட்டிலும் 10,000 மடங்கு நுகர்வதில் வல்லமை பெற்றது. அதனால்தான் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை வாசத்தை வைத்தே நாய் கண்டுபிடித்துவிடுகிறது.

 புற்றுநோய் உருவாக ஆரம்பிக்கும்போதே கண்டறிவதில்தான் பலன் இருக்கிறது என ஆய்வின் தலைவர் ஹீதர் ஜன்குயிரா கூறுகிறார்.

இவர் பையோ செண்ட் டிஎக்ஸ் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ”புற்றுநோயைக் கண்டறிய அதிக தரத்திலான நவீன கருவிகளைக் கண்டுபிடித்தால் பாதிக்கப்படும் மக்கள் பலரைக் காப்பாற்றலாம் என அவர் கூறுகிறார்.

ஆராய்ச்சியின் போது நான்கு ஆங்ஹஞ்ப்ங்ள் நாய்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின் அவற்றிற்கு எந்த நோயும் இல்லாதவரின் ரத்தம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் கொண்டவரின் ரத்தம் இரண்டையும் நுகர வைத்துள்ளனர்.

அதில் ஒரு நாய் மட்டும் சரியாக ஒத்துழைக்காமல் இருந்துள்ளது . மற்ற மூன்று நாய்கள் நுரையீரல் புற்று நோய் இருப்பதாக 96.7 சதவீதம் கண்டறிந்துள்ளன. நோய் இல்லாத ரத்தத்தையும் 97.5 சதவீதம் கண்டறிந்துள்ளன.

நாய்களை வைத்து இரண்டு முறையான புற்று நோய்  கண்டறியும் வழிமுறைகளைச் செய்தோம். அது இரண்டுமே புதிய புற்றுநோய் கருவிகளைக் கண்டறிய வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர் ஹீதர் கூறுகிறார்.
இறுதியாக ஹீதர் நாயை வைத்து ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை அதன் நுகர்வுத் தன்மையை வைத்துக் கண்டறியலாம். நாய் உறுதி செய்த பின் ஸ்கிரீன் டெஸ்ட் படி அவருக்கு கேன்ஸர் இருப்பதை உறுதி செய்யலாம்.

இரண்டாவதாக அவரின் உயிரியல் கலவையை நாய் நுகர்ந்தபின் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தபின் அதை வைத்து ஸ்கிரீனிங் டெஸ்ட் நடத்த வேண்டும் என கூறுகிறார்.

இந்தக் குழு புற்றுநோய் மட்டுமல்லாமல் மற்ற நோய்க் கிருமிகளையும் நாயின் நுகர்வைக் வைத்துக் கண்டறியும் வழிமுறைகளைச் செயல்படுத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.