தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரபுசாலமனின் "காடன்'

ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "காடன்'. ராணா, விஷ்ணு விஷால், ஜோயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 2:16 pm

DIN

ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "காடன்'. ராணா, விஷ்ணு விஷால், ஜோயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அசோக்குமார் ஒளிப்பதிவில் பிரபுசாலமன் கதை எழுதி இயக்குகிறார்.  படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பொங்கல் வெளியீடாகப் படம் திரைக்கு வரவுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "" பாரஸ்ட் ஆப் தி மேன்' என்று அழைக்கப்படுபவர் ஜாதவ் பியான்ங்.  ஒரு தனிமனிதனாக பிரம்மபுத்ரா கரையோரங்களில் 1350 ஏக்கர் பரப்பளவில் காடுகளை உருவாக்கிய மனிதன். கடந்த 2015}ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவரும்கூட. இப்படி காடுகளின் மீது அக்கறை கொண்ட மனிதன், அநாதைகளாக்கப்பட்ட யானைகள் சென்று வந்த இடத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை உடைத்து எப்படி அதன் வழித்தடங்களை உருவாக்கி கொடுக்கிறார் என்று திரைக்கதை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அதுதான் இது. ஜாதவ் பியான்ங் மனிதரின் தோற்றத்தின் பாதிப்பில் உருவான அந்த காடன் தான் ராணா. காட்டுக்குள் யானைகள் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்பும்போது அங்கே  மற்ற யானைகள் தொந்தரவு இருக்கக்கூடாது என யானை பாகனாக வருபவர்தான் விஷ்ணு விஷால். 

படத்தின் தொடக்கத்தில் எதிர்மறை கதாபாத்திரம் மாதிரி இருந்தாலும் போகப்போக வனத்தின் முக்கியத்துவம், யானைகளின் பாதுகாப்பு என புரிந்துகொண்டு ஒரு கட்டத்தில் அந்த சுவரை இடிக்க தானும் போராட்டத்தில் இறங்கும் ஒரு மனிதாக மாறுவார். 

இந்தக் கதைக்குள் காதல் உள்ளிட்ட மற்ற மசாலா விஷயங்களுக்கு வேலை கிடையாது. காடுகளின் பின்னணியில் படம் உருவாகியுள்ளதால், அதன் பிரம்மாண்டத்தைத்  திரையரங்கில் பார்த்தால் மட்டுமே சரியாக இருக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில்  வெளியாகவுள்ளது'' என்றார் பிரபுசாலமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.