தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கடல் விமானம்

1970-ஆம் ஆண்டுகளில் சீனா தனது முதல் கடல் விமானமான SH-5  விமானத்தை ராணுவ பயன்பாட்டுக்காகக் கட்டமைத்தது. நீண்டகாலம் பயன்படுத்தப்பட்ட இந்த  விமானம் பின்னர் நீக்கப்பட்டது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 1:56 pm

விஷ்ணு


1970-ஆம் ஆண்டுகளில் சீனா தனது முதல் கடல் விமானமான SH-5  விமானத்தை ராணுவ பயன்பாட்டுக்காகக் கட்டமைத்தது. நீண்டகாலம் பயன்படுத்தப்பட்ட இந்த  விமானம் பின்னர் நீக்கப்பட்டது. தற்போது சீனா தனது இரண்டாவது கடல் விமானத்தை உருவாக்கி உள்ளது.

AG600 கடல் விமானமானது 37 மீட்டர் நீளம் கொண்டது. இதன் இரண்டு இறக்கைகளுக்கு இடைப்பட்ட நீளம் 38.8 மீட்டராகும், இது கிட்டத்தட்ட போயிங் 737 விமானத்திற்குச் சமமாக உள்ளது. 

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது நான்கு டர்போ என்ஜின்களைக் கொண்டுள்ளது. இந்த விமானம் கிட்டத்தட்ட 53.5 மெட்ரிக் டன் எடை வரை தூக்கும் திறன் கொண்டது. 

AG600 விமானத்தை வடிவமைக்கும் பணியைக் கடந்த 2009 -ஆம் ஆண்டுத் தொடங்கியது. அதன்பிறகு 2016 -ஆம் ஆண்டு முழு விமானமும் வடிவமைக்கப்பட்டது.  

அதன் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குவாங்டோங் மாகாணத்திலுள்ள ஸூஹாய் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இதன் முதல் டேக் ஆப் மற்றும் லேண்டிங் சோதனை செய்து பார்க்கப்பட்டது. 
அதன் பிறகு 10 மாதங்கள் கழித்து ஹூபே மாகாணத்திலுள்ள ஜிங்மென் நகரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஸாங்கே நீர்த்தேக்கத்தில் டேக் ஆப் மட்டும் லேண்டிங் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு தற்போதுதான் முழுமையான நிலம் 

மற்றும் நீர் டேக் ஆப் மற்றும் லேண்டிங் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.