தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெரியுமா?

நீண்ட நெடிய போராட்​டத்​திற்​குப் பின்பு எத்​த​னையோ உயிர்​களை களப்​பலி கொடுத்து 1956-ஆம் ஆண்டு நவம்​பர் மாதம் 1-ஆம் நாள் திரு​வி​தாங்​கூர் தமிழ்ப்​ப​கு​தி​கள் தாய் தமி​ழ​கத்​து​டன் இணைந்​தன.

News image
Updated On :8 நவம்பர் 2020, 12:30 am

ஆ. கோ​லப்​பன்

கன்​னி​யா​கு​மரி பெயர் வரக் கார​ணம்

நீண்ட நெடிய போராட்​டத்​திற்​குப் பின்பு எத்​த​னையோ உயிர்​களை களப்​பலி கொடுத்து 1956-ஆம் ஆண்டு நவம்​பர் மாதம் 1-ஆம் நாள் திரு​வி​தாங்​கூர் தமிழ்ப்​ப​கு​தி​கள் தாய் தமி​ழ​கத்​து​டன் இணைந்​தன. இணைந்த இப்​ப​கு​தி​களை நெல்​லை​யோடு சேர்க்க வேண்​டும் என்று அன்​றைய தமி​ழக அரசு விரும்​பி​யது. ஆனால் தமி​ழ​கப் போராட்ட தியா​கி​கள் அனை​வ​ரும் போராட்​டத்தை தலைமை ஏற்று நடத்தி வெற்றி கண்ட நேச​மணி பெய​ரால் நேச​மணி மாவட்​டம் என்று பெயர் சூட்ட விரும்​பி​னர்.  ஒரு பகு​தி​யி​னர் நாஞ்​சில் மாவட்​டம் என்று பெயர் சூட்ட விரும்​பி​னர். 

நாகர்​கோ​வில் மற்​றும் கோட்டாற்​றி​லுள்ள மக்​கள் ஒன்று கூடி நாகர்​கோ​வில் மாவட்​டம் என்று பெயர் சூட்ட விரும்​பி​னர். 

ஆனால் கும​ரித் தந்த நேச​ம​ணியோ, இவற்றை பொருட்​ப​டுத்​தா​மல் இந்​தி​யா​வின் வடக்கே இம​ய​ம​லை​யைப் போன்று தெற்கே குமரி எல்லை என்று வழக்​கில் இருக்​கி​றது எனவே கன்​னி​யா​கு​மரி மாவட்​டம் என்று பெயர் சூட்டி​னால் இம்​மா​வட்​டத்​தின் பெய​ரும் உல​கெங்​கும் தெரி​ய​வ​ரும் என்று எண்​ணியே கன்​னி​யா​கு​மரி மாவட்​டம் என்று பெயர் சூட்ட விரும்​பி​னார். இதற்​காக சென்​னைக்கு சென்று அன்​றைய முதல்​வர் பெருந்​த​லை​வர் காம​ரா​ஜரை நேரில் சந்​தித்​தார். கன்​னி​யா​கு​ம​ரி​யின் முக்​கி​யத்​து​வத்தை உணர்ந்த பெருந்​த​லை​வர் காம​ரா​ஜ​ரும் மார்​ஷல் நேச​ம​ணி​யின் கோரிக்​கையை ஏற்று கன்​னி​யா​கு​மரி மாவட்டம் என்றே பெயர் சூட்டி​னார். 

(மார்​ஷல் நேச​மணி கும​ரி​யின் தந்தை என்​னும் நூலில் இருந்து)

-நாஞ்​சில் சு.நா​க​ரா​ஜன்​

காபி வந்த கதை​

Story image

நாம் குடிக்​கும் காபி எப்​படி வந்​தது தெரி​யுமா?

அபி​சீ​னியா நாட்டைச் சேர்ந்த தொழி​லாளி ஒரு​வர் ஆடு மேய்த்​துக் கொண்டு இருந்​தார். அப்​போது ஒரு செடி​யில் இருந்த காய்​களை தின்ற ஆடு புது உற்​சா​கத்​து​டன் துள்​ளளாட்​டம் போட்டு குதித்​தது. இதைக் கண்டு பிர​மித்த தொழி​லாளி தானும் அந்த காய்​க​ளைப் பறித்​துச் சாப்​பிட்​டார். உற்​சா​க​மும் சுறு​சு​றுப்​பும் ஏற்​பட்​டது.

வீடு திரும்​பி​ய​தும் அந்த காயின் மகத்​து​வம் பற்றி அவர் மற்​ற​வர்​க​ளி​டம் சொன்​னார். இப்​ப​டித்​தான் காபி கண்டு பிடிக்​கப்​பட்டு உல​கெங்​கும் பர​வி​யது.

காபி என்​கிற பெயர் அந்த ஆடு மேய்க்​கும் தொழி​லா​ளி​யின் ஊர் பெய​ரான "கவ்வா' என்​ப​தில் இருந்து மருவி வந்​த​தா​கும்.

-​போ​ளூர் ரகு​பதி

ஸ்​டீவ் ஜாப்​சின் கன​வு​

Story image

ஆப்​பிள் நிறு​வ​னர் ஸ்டீவ் ஜாப்​சின் கனவு திட்ட​மான "ஸ்பேஸ்​ஷிப் கேம்​பஸ் 2', கலிஃ​போர்​னி​யா​வில் சுமார் 2.8 மில்​லி​யன் சதுர அடி பரப்​ப​ள​வில் அமை​ய​வுள்​ளது. இதன் ஒட்டுமொத்த கட்டு​மான செலவு 5 பில்​லி​யன் அமெ​ரிக்க டாலர்​கள். இங்கு 176 ஏக்​கர் பரப்​ப​ள​வில் கண்​ணா​டி​க​ளால் ஆன பெரிய சுவர்​கள் கட்ட​மைக்​கப்​பட்​டுள்​ளன. பெரிய அலு​வ​ல​கங்​க​ளில் ஒன்​றா​க​வும் கரு​தப்​ப​டும் இந்த வளா​கத்​தில் 14,200 ஊழி​யர்​கள் பணி​பு​ரிய முடி​யும். இதன் தூரம் மட்டும் ஒரு மைலுக்​கும் அதி​க​மாம். இந்த வளா​கத்​தின் முதன்மை கட்​டத்​தின் உள்​கட்​ட​மைப்​பு​க​ளுக்கு மட்டும் 1 பில்​லி​யன் அமெ​ரிக்க டாலர்​கள் செலவு செய்​யப்​பட்​டுள்​ளது. 3 லட்சம் சதுர அடி​யில் இரு பெரிய கட்​டங்​கள் இந்த வளா​கத்​தி​னுள் ஆய்வு மற்​றும் தயா​ரிப்பு பணி​க​ளுக்​காக கட்ட​மைக்​கப்​ப​டு​கி​றது.

-​ராஜ்

​நட்​சத்​தி​ர​ ​கு​டும்​பம்​

Story image

இங்​கி​லாந்​தின் ஹெர்ட்​போர்ட்​ஷைர் பல்​க​லைக்​க​ழ​கத்​தைச் சேர்ந்த ஆய்​வா​ளர்​கள் சூரிய குடும்​பத்​துக்கு வெளியே 816 நட்சத்​தி​ரங்​க​ளைக் கொண்ட சூரிய குடும்​பத்​தைப் போன்​ற​தொரு நட்சத்​திர குடும்​பத்​தி​னைக் கண்​ட​றிந்​துள்​ள​னர். இந்த நட்சத்​தி​ரங்​க​ளில் பாதி​ய​ள​வுக்கு புதிய நட்சத்​தி​ரங்​கள் உள்ளன. 

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை தொடர்ச்​சி​யாக அகச்​சி​வப்பு கதிர்​கள் காமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்​வா​ளர்​கள் குழு, பூமி போன்றே உயிர்​வாழ உகந்த சூழல் நில​வும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட கிர​கங்​கள் அந்த நட்சத்​தி​ரக் கூட்டத்​தில் இருக்​க​லாம் என்​றும் தெரி​வித்​துள்​ள​னர். 

-​ரா​ஜி​


மா​ண​வ​னின் துணிச்​சல்​

Story image


இந்​தி​யா​வின் முதல் பிர​த​மரான நேரு ஜபல்​பூர் நக​ரத்​திற்கு வருகை புரிந்த சம​யம். நக​ரத்​தின் எல்லா கழிவு நீரும் ஆறு போல ஓடிக் கொண்​டி​ருந்​தது. நெüட்ரா பாலம் வழி​யா​கத்​தான் அந்த ஆற்றை கடக்க முடி​யும். 

பிர​த​ம​ருக்கு துர்​நாற்​றம் தெரி​யக்​கூ​டாது என்று "மோக்ரா' என்​னும் கோடைக்​கால மல​ரால் பாலத்தை அலங்​க​ரித்​த​னர். பிர​த​மர் கார் பாலத்தை கடக்​கும் போது ரஜி​னிஷ் என்​னும் கல்​லூரி மாண​வன் காரை மறித்து ""தயவு செய்து கீழே இறங்கி வாருங்​கள். நீங்​கள் இந்த மலர்​க​ளுக்குப் பின்​னால் பார்த்​தாக வேண்​டும்'' என்​றான். 

சுற்​றி​யி​ருந்த அதி​கா​ரி​கள் தடுத்த போதி​லும் காரி​ல் இருந்து கீழே இறங்கி வந்து அந்த மலர்​க​ளுக்​குப் பின்​னால் என்ன உள்​ளது என்று நேரு பார்த்​தார்.

""இந்த இளை​ஞன் மட்டும் இல்​லை​யெ​னில் இந்த நக​ரின் உண்மை நிலை​யைப் பார்க்​கா​மல் நான் தவ​ற​விட்​டி​ருப்​பேன். நீங்​கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்​கி​றீர்​கள்?'' என்று அதி​கா​ரி​களை பார்த்து கேட்டார். 

அந்த கல்​லூரி மாண​வனிடம் ""நீ பு​து​தில்லி வந்​தால் என்னை வந்து பார்'' என்​றார்.

அன்​றி​லி​ருந்து பிர​த​மர் மாளி​கை​யின் கதவு அந்த மாண​வ​னுக்​காக திறந்தே இருந்​தது.

ரஜி​னிஷ் என்​னும் இந்த மாண​வன் தான் காலப்போக்​கில் ஓஷோ என்ற தத்​துவ ஞானி​யாக மாறி​னான்.  

-​ஏ​ரல் நா.ப​ர​தன்​

சியாச்​சின் பனி​ம​லை​

Story image

சியாச்​சின் பனி​மலை பிர​தே​சம் உல​கில் துரு​வப் பகு​தி​களை தவிர்த்து மற்ற பகு​தி​க​ளில் உள்​ள​வை​க​ளில் இரண்​டா​வது மிக​வும் நீள​மான பனி​மலை பிர​தே​சம். 

அங்கு குளிர்​கா​லங்​க​ளில் மைனஸ் 50 டிகிரி செல்​சி​யஸ் வரை வெப்​பம் பதி​வா​கும். அத​னால் அப்​ப​கு​தி​யில் எல்லை பாது​காப்பு என்​பது மிக​வும் கடி​ன​மான ஒன்று. இதை பயன்​ப​டுத்தி பாகிஸ்​தான் அந்த பகு​தியை தனக்​கு​ரி​ய​தாக உரிமை கொண்​டா​டி​யது. 

அப்​ப​கு​தி​யில் உள்ள 900 சதுர மைல்​கள் முழு​வ​து​மாக இந்​தியா வசம் மீண்​டும் வந்​தது. தட்பவெட்பநிலை கார​ண​மாக அப்​ப​கு​தி​யில் ஒரு​வ​ரால் தொடர்ந்து பணி​யாற்ற இய​லாது என்​ப​தால் ராணுவ வீரர்​கள் சுழற்சி முறை​யில் அங்கு பணி​யாற்​று​கி​றார்​கள். 

இவ்​வ​ளவு கஷ்​டங்​கள் இருந்​தா​லும் இன்​றும் அப்​ப​கு​தி​யில் பணி​யாற்​று​வதை நமது வீரர்​கள் மிகப்​பெ​ரும் கெüர​வ​மாக கரு​து​கி​றார்​கள். அப்​ப​கு​தியை பார்​வை​யிட சென்ற முதல் இந்​திய பிர​த​மர் மன்​மோ​கன் சிங். முதல் இந்​திய ஜனா​தி​பதி அப்​துல் ​க​லாம். அப்​ப​கு​திக்​காக பாகிஸ்​தான் 1990, 1995, 1996 மற்​றும் 1999 ஆகிய ஆண்​டு​க​ளில் நடத்​திய தாக்​கு​தல்​கள் அனைத்​தும் முறி​ய​டிக்​கப்​பட்​டது.

பெண்​களைப் பாது​காப்​பாக அனுப்​பிய எம்.​ஜி.​ஆர்​

Story image

எம்.​ஜி.​ஆர் வாழ்​வில் பல சுவை​யான சம்​ப​வங்​கள் நடந்​துள்​ளன. அவற்​றில் சில:
ஒரு சம​யம் எம்.​ஜி.​ஆர் மதுரை காந்தி கலை​ய​ரங்​கத்​தில் பேசி​னார். ஆண்​க​ளும், பெண்​க​ளும் ஏரா​ள​மா​கத் திரண்​டி​ருந்​த​னர்.

எம்.​ஜி.​ஆர் பேசி முடித்​த​தும் ஆண்​கள் பக்​கம் திரும்பி ""நீங்​கள் எல்​லோ​ரும் அப்​ப​டியே இருங்​கள். முத​லில் தாய்​மார்​கள் வெளியே செல்​லட்​டும். அவர்​கள் சென்ற பிறகு உங்​க​ளு​டன் தனி​யாக சில விஷ​யங்​க​ளைப் பேசப் போகி​றேன்'' என்​றார்.

பெண்​கள் கூட்டம் அமை​தி​யா​கக் கலைந்து வெளியே சென்று விட்டது. என்ன பேசப் போகி​றாரோ என்று மிக​வும் ஆவ​லு​டன் ஆண்​கள் காத்​துக் கொண்​டி​ருந்​த​னர்.அப்​போது எம்.​ஜி.​ஆர் ஆண்​கள் கூட்டத்​தைப் பார்த்து ""கூட்டம் முடிந்​து​விட்​டது. இப்​போது நீங்​க​ளும் போக​லாம்'' என்​றார்.

கூட்ட நெரி​ச​லில் பெண்​கள் அகப்​பட்டு கொள்​ளக்​கூ​டாது என்​ப​தற்​காக எம்.​ஜி.​ஆர் செய்த செயலைப் புரிந்து கொண்ட ஆண்​கள் மகிழ்​வு​டன் கலைந்து சென்​ற​னர்.

ஒரு சம​யம் காவல்​து​றை​யி​னர் தேசிய நெடுஞ்​சாலை ஒன்​றில் வாக​னங்​களை நிறுத்தி சோத​னை​யிட்டு கொண்​டி​ருந்​த​னர். அப்​போது அந்த வழியே நடி​கர் எம்.​ஜி.​ஆர் காரில் வந்து கொண்​டி​ருந்​தார்.

காரில் அவர் இருப்​பதை அறி​யாத போலீஸ்​கா​ரர் அவ​ரது காரை நிறுத்​தி​னார். அப்​போது தான் காரின் உள்ளே எம்.​ஜி.​ஆர் இருப்​பதை அவர் பார்த்​தார்.

அவர் காரைச் சோதனையிடா​மல் ""மன்​னிக்க வேண்​டும் சார் நீங்​கள் போக​லாம்'' என்​றார்.

அதற்கு எம்.​ஜி.​ஆர் ""உங்​கள் கட​மை​யைச் செய்​யுங்​கள். எனக்​காக உங்​கள் கட​மை​யி​லி​ருந்து தவ​றா​தீர்​கள் என்​றார்.

அதைக் கேட்ட அந்த போலீஸ்​காரர் மெய்​சி​லிர்த்து நின்​றார்.

பின்​னா​ளில் தேர்​த​லில் போட்டி​யிட்டு தமி​ழ​கத்​தின் முதல்​வ​ரா​னார் எம்.​ஜி.​ஆர்.
(மக்​கள் தில​கம் எம்.​ஜி.​ஆர் வாழ்க்கை வர​லாறு நூலி​லி​ருந்து) 


கோ​ஹி​னூர் வைரம் 

Story image


கோஹி​னூர் வைரம், 105 கேரட் (21.6 கிராம்) எடை கொண்​டது. கோஹி​னூர் என்ற சொல்​லுக்கு பார​சீக மொழி​யில் மலை அளவு ஒளி என்று பொருள். இது இந்​தி​யா​வில், ஆந்​திர மாநி​லத்​தின் குண்​டூர் அருகே உள்ள கொல்​லூர் எனும் கிரா​மத்​தில் இருந்து வெட்டி​யெ​டுக்​கப்​பட்​ட​தாக நம்​பப்​ப​டு​கி​றது. 5000 ஆண்​டு​கள் பழை​மை​யான இந்த வைரம் பல கைகள் மாறி 1793-இல் பார​சீக மன்​னன் நாதிர்ஷா கைக்​குப் போனது. அவரே இந்த வைரத்​துக்கு கோஹி​னூர் வைரம் என்று பெய​ரிட்​டார். அதன்​பின்​னர் பஞ்​சாப் சிங்​கம் என்று அழைக்​கப்​பட்ட ரஞ்​சித் சிங் கைக​ளுக்​குச் சென்​றது. வணி​கம் செய்ய வந்து காலனி ஆதிக்​க​மாக இந்​தி​யாவை மாற்​றிய கிழக்​கிந்​தி​யக் கம்​பெ​னி​யின் சர்.​ஜான் லாரன்ஸ் இத​னைக் கைப்​பற்றி, அதை இங்​கி​லாந்து அரச குடும்​பத்​தி​ன​ருக்கு பரி​ச​ளித்​தார். தற்​போது, கோஹி​னூர் வைரம் இங்​கி​லாந்து ராணி​யின் கிரீ​டத்தை அலங்​க​ரித்து வரு​கி​றது.

குப்பை உண​வு​

Story image

​பிட்சா முத​லான ஜங்க்ஃபுட் உண​வு​க​ளுக்கு மவுசு அதி​க​மாகி வரு​கி​றது. "ஜங்க்' என்​றால் குப்பை என்று பொருள்.

ஜங்க்ஃபுட் தொடர்​பாக ஆராய்ச்சி செய்த சுவீ​டன் ஆராய்ச்​சி​யா​ளர்​கள் ஆண்​களை விட பெண்​க​ளுக்​குத்​தான் "ஜங்க்புட்' அதிக பாதிப்பை ஏற்​ப​டுத்​து​கி​றது. "ஜங்க்ஃபுட்டில் அதி​கக் கொழுப்பு உள்​ள​தால் சர்க்​கரை நோய் கூடு​வ​தற்கு வாய்ப்பு அதி​கம். அது போல் பெண்​க​ளுக்கு மாத​வி​டாய் நின்​ற​வு​டன் உயர் ரத்த அழுத்​தம் மார்​பக புற்​று​நோய் போன்​றவை வரும் வாய்ப்பு அதி​கம் என்​கி​றார்​கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.