தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தீபாவளிக்கு வெளியாகும் குறும்படம்

குறும்பட உலகத்தில் குறிப்பிடத்தக்கவர் ஜெ.எம். ராஜா. கோவையைச் சேர்ந்த இவர் இயக்குநர் கே. பாக்யராஜ், நவீன் ஆகியோரிடம்  உதவியாளராக இருந்து சினிமா கற்றவர்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 12:30 am

DIN


குறும்பட உலகத்தில் குறிப்பிடத்தக்கவர் ஜெ.எம். ராஜா. கோவையைச் சேர்ந்த இவர் இயக்குநர் கே. பாக்யராஜ், நவீன் ஆகியோரிடம்  உதவியாளராக இருந்து சினிமா கற்றவர். கரோனா பொது முடக்க காலத்தில் இவர் இயக்கி வெளியிட்ட குறும்படங்கள் இணைய தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 

"ஒரு நாள்', "இருவர்', "சொந்த பந்தம்'  என இவர் இயக்கிய  குறும்படங்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளது.  தற்போது "அல்வா'  என்ற குறும்படத்தை இவர் இயக்கியுள்ளார்.  கதையின் நாயகனாக பிரபல கலை இயக்குநர் கிரண் நடிக்கிறார். இதுவரை படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் முதன் முறையாகக் குறும்படத்தில் நடிக்கிறார். வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். 

டெல்லி கணேஷ் மற்றும் அவரது மகன் பாலா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் தங்கராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரோகித் சோகன் பாபு இசையமைத்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகைக்கு இணையத்தில் வெளியாகவுள்ள இந்த குறும்படம் குறித்து பேசும் போது....  "" பாக்யராஜ்

பாணியில் குடும்பங்களில் நடக்கும் சில அழகான தொல்லைகளை வைத்து முழுவதும் நகைச்சுவையாக உருவாகி இருக்கிறது. 33 வயது கொண்டவர் 22  வயது பெண்ணைத் திருமணம் செய்கிறார்.  அதன் பின் அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்லுவதே கதை.  முழுப் படத்தில் சொல்ல வேண்டிய சுவாரஸ்ய கதைதான். ஆனால், தற்போதைய சூழலில் அதைக் குறும்படமாக முடித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியாகியுள்ள டீசருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறும்படத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஹிந்தியில் உருவாகி வரும் மகாத்மா காந்தியின் வரலாற்றுப் படத்துக்கான தமிழ்,  தெலுங்கு,  மலையாள மொழிமாற்று வசனத்தைத் தற்போது எழுதி வருகிறேன்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.