நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓட்டுநரின் சாமர்த்தியம்

ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்..

News image
Updated On :18 அக்டோபர் 2020, 12:30 am

ராஜி



ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.. இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன் கேட்டார்..

"ஐயா.. இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே..?'

"அது இயலாது டாம்.. ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள்.. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை..!'

இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை.. ஒரு யோசனை சொன்னார்..

"ஐயா.. ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே..? உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன்.. இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே..?'

ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள, ஓட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.

கூட்டத்துக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பினார்கள். இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. அவர் ஒரு விஷயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்.

திக்கு முக்காடிய ஓட்டுநர் சட்டென சுதாரித்து சொன்னார்..

இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே.. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்..!

மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே, ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளித்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.