போதைப் பொருள் விவகாரத்தில் மேக்னா
கர்நாடக மாநிலத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.


கர்நாடக மாநிலத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். கைதானவர்களில் ஒருவரின் டைரியில் கன்னட திரையுலகை சேர்ந்த 15 பேரின் பெயர்கள் இருந்தன.இந்த நிலையில் கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் இருப்பதாக இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்குமாறு போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறினார்கள். அவரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். கன்னட திரையுலகை சேர்ந்த 15 பேரின் பெயர்களை இந்திரஜித் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மாரடைப்பால் கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் பெயரை இந்திரஜித் குறிப்பிட்டதை கேட்டு அவரின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் வேதனை அடைந்துள்ளார். சிரஞ்சீவியை பற்றி தவறாக பேசியதற்காக இந்திரஜித் லங்கேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திரஜித் லங்கேஷ் கூறியதாவது,""நான் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு எதிராக அளித்த வாக்குமூலங்களை ஏற்கெனவே வாபஸ் பெற்றுவிட்டேன். போதைப் பொருள் விஷயத்தில் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு தொடர்பு இருக்கிறது என்று நான் கூறவில்லை. சிரஞ்சீவி இறந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்றார் அவரின் தந்தை. அதனால் சிரஞ்சீவியின் மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தான் கூறினேன்.அப்படி நான் கூறியது மேக்னா ராஜ் அல்லது அவரின் குடும்பத்தார் யாரையாவது காயப்படுத்தியிருந்தால், பொது இடத்தில் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...