விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
விஜய், சூர்யா இருவரும் பொது பிரச்னைகள் குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதுண்டு.


விஜய், சூர்யா இருவரும் பொது பிரச்னைகள் குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதுண்டு. ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு வெளிப்படையாக தனது கண்டனத்தை தெரிவித்தார் விஜய்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது போல் சூர்யாவும் தனது கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். நீட் தேர்வு குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை, பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையில் போஸ்டர் போர் தொடங்கியுள்ளது. கரோனா பொது முடக்கம் நடைமுறையில் இருந்தாலும் மதுரையில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன.
விஜய் ரசிகர்கள் எம்.ஜி.ஆர், விவேகானந்தர் என தலைவர்களை வைத்து அவர்களைப் போல் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் சூர்யா ரசிகர்கள் ஒரு படி மேலே போய் சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து "திரையுலகை ஆண்டது போதும்... தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...!' என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன், தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். நடிகர் சூர்யாவின் இந்த போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய போஸ்டரை உருவாக்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...