மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

போனது வேலை : வந்தது சுய தொழில்!

""நகர வாழ்க்கையில் படிப்புக்கேற்ற ஊதியம் இல்லை. ஆனால்,  கிராமத்தில் விவசாயி ஆகி இன்று நூறு பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் பட்டதாரியான அபிமன்யு.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 12:30 am

ஜெ

""நகர வாழ்க்கையில் படிப்புக்கேற்ற ஊதியம் இல்லை. ஆனால்,  கிராமத்தில் விவசாயி ஆகி இன்று நூறு பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் பட்டதாரியான அபிமன்யு.

யார் இந்த அபிமன்யு?

நீலகிரி மாவட்டம் மசினகுடியைச் சேர்ந்தவர் அபிமன்யு 28 வயதான  எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். 

படிப்புக்கேற்ற ஊதியம் இல்லை. ஆனாலும் குறைவான சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையிழந்தார் அபிமன்யு.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என யோசித்த போது விவசாயம் செய்ய முடிவு எடுத்தார். மசினகுடியிலுள்ள தனது சொந்த நிலத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பூண்டு பயிரிட்டார். சுமார் 3 மாதங்கள் நன்கு பராமரித்ததால், பூண்டு விளைச்சல் அமோகமாக இருந்தது. இதில் 9 ஆயிரம் கிலோ பூண்டு அறுவடை செய்யப்பட்டது. கரோனா காலத்தில் பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பதால் அதற்கு மவுசு ஏற்பட்டது.  இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

அபிமன்யுவிடம்  பேசிய போது சொன்னார்:-

""பொது முடக்கத்தால் வேலையிழந்த பிறகு எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்தேன். சுமார் 3 மாத உழைப்புக்குப் பிறகு அறுவடை செய்த பூண்டுகளை விற்பனை செய்தேன். அதில் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 

மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுக்கு மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  

பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும் இனி  வேலைக்குச் செல்லப்போவதில்லை. இனி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன்.  

என்னால்  ஆதிவாசி மக்கள் நூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. என்றுமே சுய தொழில் தான் கை கொடுக்கும் என்பதைப் பட்டதாரிகள் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது'' என்கிறார் அபிமன்யு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.