காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இணையத்தை கவர்ந்த தம்பதி

கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு ஒன்று, மூன்று லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 4:48 pm

ஜெ

கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு ஒன்று, மூன்று லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது பார்வையாளர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. அந்தப் பதிவின் முக்கிய அம்சம் தான் என்ன?

திருமணம் ஆன ஓர் ஆண்டிலேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்லும் இன்றைய தம்பதிகள் மத்தியில் 101 வயது தாத்தாவும், 90 வயதை எட்டிய அவரின் மனைவியும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பதிகளாக இணைந்து வாழும் வாழ்க்கை ரகசியத்தை பகிர்ந்து கொள்ளும் விடியோ தான் அந்தப் பதிவு.

வயது மூத்த தம்பதிகளான இருவரும் இத்தனை வருடங்கள் திருமண உறவில் ஒன்றாக வாழ்ந்தது, சண்டை, சண்டைக்கு பின்னால் இருக்கும் அன்பு எனப் பல விஷயங்களை இன்றைய இளைய தலைமுறைக்காக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர்.

""நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கிறோம். தினமும் ஒரு வேளை உணவை ஒன்றாகவே அருந்துவோம். அந்த தருணத்தில், அன்றைய தினத்தில் நடந்த விஷயங்களை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வோம். இதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கணவன்- மனைவி உறவில் சண்டை இயல்பு என்பதை புரிந்துகொள்வது அவசியம். சண்டைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. எனவே தம்பதிகளுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். சில நேரங்களில் நீங்கள் கொஞ்சம் காது கேளாதவராகவும், கொஞ்சம் ஊமையாகவும் நடிக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், எப்போதும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். தவறுகளை மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும், அல்லது கடந்து போகவும் பழகிக்கொள்ளுங்கள். அப்படி செய்தால் உறவில் பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஒன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து கணவன் மனைவி இருவரும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது. மேலும், இன்றைய காலங்களில் திருமண பந்தத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை விடுத்து இல்லற வாழ்வில் இனிமையாக  வாழுங்கள்.

விவாகரத்து முடிவெடுக்கும் எந்த தம்பதியினரும் நாங்கள் பேசியிருக்கும் இந்த விடியோவைப் பாருங்கள்.  தாங்கள் பிரியும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்று கருதுகிறோம்'' என்று கூறியிருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.